கம்பு சாகுபடியில் ஆர்வம் காட்டும் உடுமலை விவசாயிகள்!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கோடைகால உணவு வகையில் ஒன்றான கம்பை விவசாயிகள் அதிக அளவில் சாகுபடி செய்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மடத்துக்குளம் குடிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில்பரம்பிக்குளம் பாசனத்திட்டம் அமராவதி பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன திட்டத்தில் சுமார் 5 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.



இதுதவிர, இப்பகுதிகளில் இப்பகுதிகளில் மானாவாரி சாகுபடி கம்பு, சோளம் போன்றவை அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தற்போது, உடுமலை பகுதியில் கம்பு சாகுபடியில் விவசாயிகள் பெருமளவில் ஈடுபட்டுள்ளனர். கோடைகாலத்திற்கு ஏற்ற உணவாக கம்பு உள்ளதால் விவசாயிகள் கம்பு சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கம்பு சாகுபடி செய்ய ஏக்கருக்கு 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை முதலீடு செய்யப்பட்டுள்ளபோதும், விற்பனை விலை ஓரளவுக்கு இருப்பதால் நல்ல வருவாய் கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...