தமிழகத்தின் சட்ட ஒழுங்கிற்கும் அண்ணாமலைக்கும் என்ன சம்பந்தம்..? - கோவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக இருக்கின்றனர். பொதுமக்களை திமுகவினர் அடைத்து வைக்கவில்லை என்று கோவை விமான நிலையத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.



கோவை: ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக திமுக அமைச்சர்கள் மற்றும் ஆதரவு கட்சி தலைவர்கள் பலரும் பிரச்சார மேற்கொண்டு வருகின்றனர்.



இந்நிலையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக இன்று மாலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அத்தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.



இதற்காக விமானம் மூலம் அவர் இன்று கோவை வந்தடைந்தார். சாலை மார்க்கமாக ஈரோடு புறப்படும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னதாக கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், அதிமுகவினர் வாக்காளர்களுக்கு கொலுசு கொடுப்பதாக முன்வைக்கப்படும் கருத்துக்கு, மக்கள் தெளிவான முடிவில் இருக்கிறார்கள் என பதில் அளித்தார். மேலும், திமுகவினர் மக்களை அடைத்து வைப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டு வைப்பது குறித்த கேள்விக்கு, அவ்வாறு எதுவும் இல்லை என்றார்.

கமலஹாசனின் பிரச்சாரத்திற்கு வந்த பொதுமக்கள் கூட்டம் வாக்குகளாக மாறாது என அதிமுக கட்சியினர் தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு, பொறுத்திருந்து பார்க்கலாம் என உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார்.

சட்டம் ஒழுங்கு குறித்து அண்ணாமலை இடம் கேள்வி கேளுங்கள் என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தது குறித்து கேள்வி எழுப்பியதற்கு அண்ணாமலைக்கும் சட்டம் ஒழுங்கிற்கும் என்ன சம்பந்தம் உள்ளது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...