நீலகிரி அகழியில் தவறி விழுந்த தாய், குட்டி யானைகள் - பத்திரமாக மீட்ட வனத்துறை!

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம், போஸ்பாரா பகுதியில் உள்ள அகழியில் தாய் யானை மற்றும் குட்டி யானையை தவறி விழுந்தன. யானைகள் மேலே ஏறி வர வழி ஏற்படுத்தி வனத்துறையினர் பாதுகாப்பாக மீட்டு, மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டத்திலுள்ள முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இந்த காப்பகத்தில் தற்போது வறட்சி காலம் தொடங்கியிருக்கும் நிலையில் காட்டு யானைகள் குட்டிகளுடன் இடம்பெயர்ந்து செல்ல தொடங்கியுள்ளன.



இந்நிலையில், குட்டியுடன் நான்கு யானைகள் இன்று காலை முதுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட போஸ்பாரா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அங்கே வனத்துறை சார்பாக அமைக்கப்பட்டிருந்த அகழியில் இறங்கின.



ஆனால் அகழியின் இரு புறங்களும் உயரமாக இருந்த காரணத்தினால் குட்டி யானையால் மேலே ஏறி வர முடியவில்லை. அதனை அடுத்து தாய் யானையுடன் சேர்ந்து சக யானைகள் குட்டியை அகழியில் இருந்து மேலே அழைத்து வர போராடின. முடியாத காரணத்தினால் யானை கூட்டம் தொடர்ந்து சத்தமிட்டு கொண்டே இருந்தது.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர், யானையை மேலே ஏறி வர வழி ஏற்படுத்தினர். அந்த வழியாக தாய் யானை உள்ளிட்ட பெரிய யானைகள் ஏறிய நிலையில், குட்டி யானையை வனத்துறையினர் மேலே ஏற்றிவிட்டனர். இதனையடுத்து குட்டி யானை தாய் யானையுடன் பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் சென்றது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...