அன்னூர் பேருந்து நிலையத்தில் கூடுதல் இருக்கைகள் அமைக்க கோரிக்கை!

கோவை அன்னூர் கமராஜர் பேருந்து நிலையத்தில் பயணிகள் அமருவதற்கு போதிய இருக்கை இல்லாததால், தரையில் அமரும் அவலம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக காலை, மாலை நேரங்களில் அதிகமான பயணிகள் கூடுவதால், மணி கணக்கில் கால் கடுக்க நிற்க வேண்டியுள்ளதால் போதிய இருக்கை வசதி ஏற்படுத்திக் கொடுக்க பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


கோவை: அன்னூர் பேருந்து நிலையத்தில் போதிய இருக்கை வசதி இல்லாததால் பயணிகள் தரையில் அமரும் நிலை உள்ளது.

கோவை மாவட்டம் அன்னூரில் கடந்த 2000ஆம் ஆண்டு காமராஜர் பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையமானது கோவை, திருப்பூர், நீலகிரி மற்றும் சத்தி, கர்நாடகாவிற்குச் செல்லும் மையப்பகுதியாக அமைந்துள்ளது.

மேலும் இந்த பேருந்து நிலையத்திலிருந்து கோவை, திருப்பூர், நீலகிரி, சத்தி உள்ளிட்ட பகுதிகளுக்கும், அன்னூரைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளுக்கும் தினசரி 500க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த பேருந்தில் பயணிக்கக் கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் திருப்பூர் பனியன் கம்பெனிக்கு வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியான கோவை, மேட்டுப்பாளையம் போன்ற முக்கியமான நகரங்களுக்குச் செல்வதற்கு என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.

இதனால் இந்த பேருந்து நிலையம் எப்போதும் கூட்டமாகவும், பரபரப்பாகவும் இயங்கிக் கொண்டிருக்கும். கூட்டம் அதிகமாக இருப்பதால், பயணிகள் அமருவதற்கு, போதிய இருக்கை வசதிகள் இல்லை. இதனால் பயணிகள் பேருந்து வரும் வரை நீண்ட நேரம் கால்கடுக்கக் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

குறிப்பாகக் காலை, மாலை நேரங்களில் அதிகமான பயணிகள் கூடுவதால், அவர்கள் அமருவதற்கு இருக்கை இல்லாததால் தரையில் அமரும் நிலையும் உள்ளது. எனவே பயணிகள் வசதிக்காகக் கூடுதல் இருக்கைகள் அமைத்துத் தர வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...