கோவை வேளாண் பல்கலை மாணவர்களுக்கு தொழில் முனைவோர் மென்திறன் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழக மாணவர்களுக்கான தொழில்‌ முனைவோர் மென்திறன் மேம்பாடு பற்றிய ஒருநாள்‌ கருத்தரங்கு நடைபெற்றது. இதில் தனிப்பட்ட நபர்‌ திறன்‌ மேம்பாடு மற்றும்‌ குழு மேம்பாடு போன்ற பயிற்சிகள்‌ அளிக்கப்பட்டன.


கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகத்தில் தொழில்‌ முனைவோர்களுக்கான மென்திறன் மேம்பாடு பற்றிய ஒருநாள்‌ கருத்தரங்கு நடைபெற்றது.

இந்திய வேளாண்‌ ஆராய்ச்சி கழகத்தின்‌ கீழ்‌ இயங்கும்‌ தேசிய வேளாண்‌ ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகத்தால்‌ பயிற்சியாளர்களுக்கான பயிற்சி என்ற தலைப்பில் ஜனவரி 23 மற்றும்‌ 24 ஆகிய இரண்டு நாட்கள்‌ பயிற்சி நடைபெற்றது. இதில்‌ 27 மாநில வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள்‌ கலந்து கொண்டனர்‌. இப்பயிற்சியைத் தொடர்ந்து 100 வேளாண்மை சார்ந்த படிப்புகளைப் பயிலும்‌ மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப் பரிந்துரைக்கப்பட்டது.

இதைத்‌ தொடர்ந்து தமிழ்நாடு வேளாண்‌ பல்கலைக்கழகத்தில்‌ மாணவர்களுக்கான ஒருநாள்‌ கருத்தரங்கு “வேளாண் மாணவர்களுக்கிடையே தொழில்‌ முனைவோர்களுக்கான மென்திறன்‌ மேம்பாடு” என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது.

வேளாண்மை சார்ந்த படிப்புகளான இளமறிவியல்‌ (வேளாண்மை), இளமறிவியல்‌ (தோட்டக்கலை) இளம்‌ தொழில்நுட்பம்‌ (உணவு தொழில்நுட்பம்) இளம்‌ தொழில்நுட்பம்‌ (சக்தி மற்றும்‌ சுற்றுச்சூழல்‌ பொறியியல்‌) இளம்‌ தொழில்நுட்பம்‌(வேளாண் பொறியியல்‌) மற்றும்‌ இளம் அறிவியல்‌ (வேளாண் தொழில்‌ மேலாண்மை) போன்ற மாணவர்கள்‌ பங்கேற்றனர்‌. இதில்‌ மென்திறன்‌களான பேச்சுத்திறன்‌, தனிப்பட்ட நபர்‌ திறன்‌ மேம்பாடு மற்றும்‌ குழு மேம்பாடு போன்ற பயிற்சிகள்‌ அளிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில்‌ முனைவர்‌ உமா துறைத்தலைவர்‌, ஊரக மேம்பாட்டுத்துறை வரவேற்புரை வழங்கினார்‌. இதைத்‌ தொடர்ந்து வெங்கடேச பழனிச்சாமி முதல்வர்‌ (வேளாண்மை) மற்றும்‌ சுரேஷ்‌ குமார்‌ இயக்குநர்‌ (வேளாண்மை மற்றும்‌ ஊரக மேம்பாட்டு இயக்கம்‌) சிறப்புரையாற்றினர்‌. முனைவர்‌ திவ்யா இணை பேராசிரியை நன்றியுரை வழங்கினார்‌.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...