கோவை டிராவல்ஸ் உரிமையாளர் தற்கொலை - தொழில்நஷ்டம் காரணம் என விசாரணையில் தகவல்

கோவை தொப்பம்பட்டி லட்சுமி நகர் பகுதியில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டடத்தால் மனமுடைந்த டிராவல்ஸ் உரிமையாளர் தினேஷ்குமார் தற்கொலை செய்துகொண்டது குறித்து துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



கோவை: à®•ோவை தொப்பம்பட்டி லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார். இவரது மனைவி ஜானகி. இவர்களுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிறது. தினேஷ்குமார் சொந்தமாக வாகனங்கள் வைத்து டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் கொரோனா காரணமாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதனால், தன்னிடம் இருந்த வாகனங்களை தினேஷ்குமார் விற்றுள்ளார். மேலும், தனியார் வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமலும் அவர் இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் பிரச்சனைகளால் விரக்தியில் இருந்து வந்த தினேஷ்குமார், நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து அவர் மனைவி அளித்த புகாரின் பேரில், துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...