நீலகிரி வனத்தில் வறட்சியால் காட்டுத் தீ ஆபத்து - தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி தீவிரம்

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் வறட்சி தொடங்கி உள்ளதை அடுத்து, காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 300 கிலோ மீட்டருக்கு தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.



நீலகிரி: மலை மாவட்டமான நீலகிரியில் பனிக்காலம் முடிந்து கோடை காலம் விரைவில் தொடங்க உள்ளது. இதனால், பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. வெப்பநிலை அதிகரித்து வருவதால் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள நீர் நிலைகள் வறண்டு வருகின்றன.



இதனையடுத்து காட்டுத் தீ ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கிய சாலைகளின் ஓரங்களிலும், வன பகுதிக்குள்ளும் 300 கிலோ மீட்டர் தூரத்திற்கு தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.



குறிப்பாக, உதகையிலிருந்து முதுமலைக்கு செல்லும் கல்லட்டி மலைப்பாதை, மசினகுடி நெடுஞ்சாலை மற்றும் தொரப்பள்ளி - கக்கநல்லா தேசிய நெடுஞ்சாலை என முக்கிய சாலைகளின் இருபுறமும், மசினகுடி, சிங்கார, சீகூர், முதுமலை, தெப்பக்காடு, கார்குடி வனபகுதிக்குள்ளும் என சுமார் 300 கிலோ மீட்டருக்கு தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டு வருகிறது.



இந்த பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.



கோடைகாலத்தில் காட்டு தீ ஏற்பட்டு ஆயிரக்கணக்கான ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாவதை தடுக்க அமைக்கபடும் இந்த தீ தடுப்பு கோடுகளைக்கொண்டு, வன பகுதியில் பற்றி எரியும் தீ ஒரு பகுதியிலிருந்து மற்ற பகுதிக்கு பரவிச்செல்லாமல் தடுக்க உதவும் என்பதால் ஆண்டுதோறும் கோடை காலத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...