ஈமு கோழி மோசடி வழக்கில் 43 லட்சம் அபராதம், 5ஆண்டு சிறை, கோவை தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு நீதிமன்றத்தில் தீர்ப்பு!


ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்ற ஈமு கோழி மோசடி வழக்கில் நிறுவனத்தை நடத்தியவர்களுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், 43 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2011-12 ஆம் ஆண்டுகளில் தமிழகத்தில் நடைபெற்ற மிகப்பெரிய ஈமு கோழி மோசடி வழக்கில் 2ஆம் முறையாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் செயல்பட்ட நிதி ஈமு பார்ம்ஸ் என்ற பெயரில் 4நிறுவனம் ஈமு கோழி மூலம் பணம் அதிகமாக சம்பாதிக்கலாம் என கூறி பல்வேறு சலுகை திட்டங்களுடன் முதலீட்டாளர்களிடம் பணம் பெற்றுள்ளது. ஆனால் கூறியப்படி பணத்தை தராததால் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த வீரமணி என்பவர் அளித்த புகாரின் பேரில் ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் கடந்த 2012 ஆம் ஆண்டு 3பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நிறுவனத்தை நடத்தி வந்த சேகர், முனியன், கார்த்திகேயன் ஆகிய மூவரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு கோவை தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், மோசடி மற்றும் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சட்டம் 5ன் கீழ் ஆகிய இரு பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டதாக தீர்ப்பளிக்கப்பட்டது. 

மேலும்,மோசடியில் ஈடுபட்ட அனுமதியின்றி நிதி ஈமு பார்ம்ஸ் என்ற பெயரில் செயல்பட்ட 4 நிறுவனத்திற்கும் தலா 4 லட்சத்து 32ஆயிரம் ரூபாய் என மொத்தம் 17 லட்சத்து 28 ஆயிரம் ரூபாயும், நிறுவனத்தை நடத்திய சேகர், முனியன், கார்த்திகேயனுக்கு தலா 8 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 25 லட்சத்து 92ஆயிரம் ரூபாயும் மொத்தம் 43 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில்,  72 ஆயிரம் ரூபாய் அரசுக்கு அபராதமும், மீதம் 42 லட்சத்து 48ஆயிரம் ரூபாயை பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களக்கு வழங்கவும், முனியன், சேகர், கார்த்திகேயனுக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி பாபு உத்தரவிட்டதையடுத்து மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். 

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...