தாராபுரத்தில் கண்டெய்னர் லாரி மீது வேன் மோதி விபத்து - போக்குவரத்து பாதிப்பு

தாராபுரம் அருகே அலங்கியம் - பழனி சாலையில் கண்டெய்னர் லாரி மீது கறிக்கோழிகளை ஏற்றி வந்த ஈச்சர் வேன் மோதி விபத்து. நூற்றுக்கும் மேற்பட்ட கறிக்கோழிகள் உயிரிழப்பு. விபத்தால் அப்பகுதியில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த மூலனூர் அருகே உள்ள தனியார் கறிக்கோழி உற்பத்தி நிறுவனத்தில் இருந்து ஆயிரம் கறிக்கோழிகளை லோடாக ஏற்றிக்கொண்ட வேன், பழனி மற்றும் கொடைக்கானல் செல்வதற்காக சென்று கொண்டிருந்தது.



தாராபுரம் பைபாஸ் சாலை அலங்கியம் பழனி செல்லும் சாலை சந்திப்பு ரவுண்டானா அருகே செல்லும்போது தூத்துக்குடியில் இருந்து காங்கேயம் நோக்கி சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டது.



இதில், கறிக்கோழி வேன் கவிழ்ந்ததில், பெட்டிகளில் அடிக்கி வைக்கப்பட்டிருந்த கறிக்கோழி பெட்டிகள் சாலையில் தாறுமாறாக சிதறி கவிழ்ந்ததில் நூற்றுக்கு மேற்பட்ட கறிக்கோழிகள் உயிரிழந்தன.



இந்த விபத்தில் சிக்கிய கண்டெய்னர் லாரி சாலையின் நடுவே ஜாமாகி நின்றது.

இந்த சம்பவத்தின்போது அலங்கியம் ரவுண்டானா சாலையில் சாலையை கடப்பதற்காக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் வந்த நபர் கறிக்கோழி லாரியின் வேகத்தை பார்த்ததும் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடியதால் அவர் உயிர் தப்பினார்.



இதில் இருசக்கர வாகனமும் பலத்த சேதம் அடைந்தது.



தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாராபுரம் காவல்துறை டிஎஸ்பி தன்ராஜ் தலைமையில் போக்குவரத்து ஆய்வாளர் ஞானவேல் மற்றும் போலீசார், கிரேன் மூலம் விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தும் முயற்சிகள் ஈடுபட்டனர்.



இதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



கறிக்கோழி நிறுவனத்தில் இருந்து வந்த ஊழியர்கள் இறந்த கோழிகளையும் உயிருடன் இருந்த கோழிகளையும் கூண்டுகளோடு மற்றொரு லாரியில் ஏற்றி கொண்டு சென்றனர். இந்த விபத்தில் லேசான காயமடைந்த லாரி டிரைவர்கள் இரண்டு பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த தாராபுரம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



இந்த சாலை விபத்தால் அலங்கியம் ரவுண்டானா பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...