கோவையில் சுட்டெரிக்கும் வெயில் - சூடுபிடித்துள்ள பதனி விற்பனை!

கோவையில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், உடல் சூட்டைத் தணிக்கும் வகையில் பொதுமக்கள் குளிர்ச்சி தரும் பானங்களை நாடத் தொடங்கியுள்ளனர். அந்த வரிசையில், கோவையில் தற்போது முதலிடத்தில் இருப்பது பதனி விற்பனை.


கோவை: ஜனவரி மாதம் பிறந்தவுடன் கூடவே கோடையும் பிறந்துவிடுகின்றது. காலை 11 மணிக்கும் ஆரம்பமாகும் கொழுத்தும் வெயில், நன்பகல் 1 மணிக்கு உக்கிரமாகி, 3 மணிக்கு மேல் மாலை மசுங்க வெயில் தணிந்து வெப்பம் குறைய ஆரம்பிக்கும்.

இந்த நிலையில் வெப்பம் உச்சத்தை தொடும் வேளையில், வெப்பத்தினை தணிக்க ஓடுவதே, பொதுமக்களின் முதல் வேலையாக இருக்கிறது.



குறிப்பாக சாலை ஓரங்களில் ஆங்காங்கே விற்கப்படுகின்ற தர்பூசணி, வெள்ளரி, கரும்பு சாறு, முளாம்பழ சாறு, மோர், பதனி போன்ற உடலுக்கு குளிர்ச்சியான பானங்களை தேடி மக்கள் படையெடுக்கின்றனர்.

பதனியை பருக படையெடுக்கும் பொதுமக்கள்!

வெப்பத்தை தணிக்க பல பானங்கள், பழங்கள் இருந்தாலும், பதனி பானத்துக்கு எப்போதும் தனி இடம் உண்டு. அந்த வகையில், பதனியை தேடித்தேடி பருகுவோர் எண்ணிக்கை எப்போதுமே சற்று அதிகம்தான்.



பனைமரத்தில் இருந்து கிடைக்கும் சத்து நிறைந்த பதநீரை அருந்த, பதனி பிரியர்கள் பதனி கடைகளுக்கு படையெடுக்கின்றனர்.



இவை சீசன் காலங்களில் மட்டுமே கிடைக்கும் என்பதால் அதற்கு மிகுந்த முக்கியத்துவம் தந்து மக்கள் பருகி வருகின்றனர்.



அதுவும் நொங்குடன் சேர்த்து பதனி பருகுவதை பலரும் விரும்புகின்றனர். குறிப்பாகக பனை ஓலையில் சாப்பிடும் நொங்கு- பதனி காம்பினேசன் அருமை என்கின்றனர் பதனிப்பிரியர்கள்.

பதனியும்.. பயனும்..

உணவே மருந்து என்று சொல்வார்கள். அந்த வகையில் பதநீரானாது உடல் வெப்பத்தை தணிக்கும் பானத்தை கடந்து மருந்தாக செயல்படுகின்றது. குறிப்பாக பதநீரை உணவு உட்கொண்ட பின் பருகுவதைவிட, உணவு உட்கொள்ளும் முன் வெறும் வயிற்றில் குடிப்பது மிகவும் நல்லது. ஒரு சொம்பு 20 முதல் 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.



பதனியை தனியாக பருவதை காட்டிலும், அதனை நொங்குவுடன் சேர்த்து பருகுகின்றனர். இது உடல் மெலிந்தவர்களுக்குச் சிறந்த ஊக்கத்தை தரக்கூடியதாகவும், வெயில் காலங்களில் வரக்கூடிய நீர்க்கடுப்பு, சிறுநீர் வெளியேறும் பாதையில் வரக்கூடிய வலிகளை குணப்படுத்தி, சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகளை குணப்படுத்தும் தன்மை கொண்டது.

பழைய கஞ்சியுடன் சேர்த்து தடவினால் ஆறாத புண்களும் ஆறும், விரைவில் குணமடையும் என்று நாட்டு வைத்தியம் கூறுகிறது. உடலுக்கும் குளிர்ச்சி தரும் இந்த பதநீரை 48 நாட்கள் தொடர்ந்து குடித்தால் மேகநோய்கள் தணியும். பதநீரில் சுண்ணாம்பு சேர்க்கப்படுவதால் உடலுக்கு தேவையான கால்சியம் சத்து கிடைப்பதாகவும், எலும்பு தொடர்பான நோய்கள் மற்றும் எலும்பு தேய்மானம் ஏற்படாமல் பாதுகாக்கும் என்று கூறுகின்றனர் பதனிப்பிரியர்கள்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...