உடுமலையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் - கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம்

உடுமலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய உரிமைச் சட்டம் 2016 முறையாக அமலாக்கம் செய்ய வேண்டும், மாநில அரசு அறிவித்த 1500 ரூபாயும், கடுமையான மாற்றுத்திறனாளிகளுக்கு 2000ரூபாயும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தல்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமையாளர்களுக்கான சங்கம் சார்பில் மாவட்ட பொறுப்பாளர் மாலினி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய உரிமைச் சட்டம் 2016 முறையாக அமலாக்கம் செய்ய வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு மாநில அரசு அறிவித்த 1500 ரூபாயும், கடுமையான மாற்றுத்திறனாளிகளுக்கு 2000 ரூபாயும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும், மாற்று திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.



100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நான்கு மணி நேரம் மற்றும் வேலை வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க் கூட்டம் வருவாய் கோட்டாச்சியர் தலைமையில் இரண்டு மாதத்துக்கு ஒரு முறை நடத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் வேலை தெரிந்தவர்களுக்கு தையல் இயந்திரம் இலவசமாக வழங்க வேண்டும்.



காவல் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள் புகார் மனுக்கள் மீது மாற்றுத்திறனாளிகள் சட்டப்படி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை போராட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் ராஜேஷ், சிஐடியு ஜெகதீஷ், கனகராஜ், ரங்கநாதன் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...