தொழில்துறையில் தமிழகம் முதலிடம் - கோவையின் பங்கு என்ன? - ஒரு பார்வை

மின் மோட்டார் பம்பு செட்டில் ஆரம்பித்து விவசாயம் சார்ந்த ஜவுளி தொழிலுக்கான உபகரணங்கள், ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரீஸ் என அனைத்து தொழில் துறைகளுக்குமான அடித்தளமாக தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படக்கூடிய கோயம்புத்தூரே இன்றளவும் இருந்துவருகிறது.



கோவை: இந்தியாவில் தொழில்துறையில் சிறந்த மாநிலமாக தமிழகம் இருந்துவருவதற்கு முக்கிய காரணமான மாவட்டம் கோவை. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும் கோவை தொழிற்துறையின் வெற்றிப்பின்னணி மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்து பார்ப்போம்.

இந்தியாவில் அதிக தொழிற்சாலைகளை கொண்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதல் இடம் பிடித்துள்ளது. இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் 16.6% தொழிற்சாலைகள் தமிழகத்தில் இயங்குகின்றன. அதனடிப்படையிலேயே இன்று தொழில் துறையில் தமிழ்நாடு முதலிடம் என்ற அரியணையை அலங்கரித்திருக்கின்றது.

தமிழ்நாட்டின் இந்த பெருமைக்கும் வெற்றிக்கும் வித்திட்ட தொழில் நகரங்களில் முக்கியமானது, சொல்லாப்போனால் முதன்மையானது கோயமுத்தூர் தொழில் நகரம். தென்னிந்தியாவின் மான்ஸெஸ்டர் என்று அழைக்கப்படும் கோயமுத்தூர் குடிசை, சிறு குறு நடுத்தர மற்றும் பெரிய தொழில் என தொழில் வளத்தில் சிறந்து விளங்கி வருகின்றது. லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரமாக இருக்கும் கோயமுத்தூரின் தொழில் துறை, தொழில் நகரங்களின் முன்னோடியாக பார்ப்பதன் பின்னணி சுவாரஸ்யமானது.

இந்தியாவின் முதுகெலும்பான விவசாயம் இன்று நம் நாட்டில் வேரூன்ற, நாட்டில் பசுமை புரட்சி ஏற்பட மின் மோட்டார் பம்பை நாட்டிலேயே முதன்முதலாக தயாரித்து சந்தைப்படுத்தியது கோயமுத்தூர் தொழில் நகரம்தான். மின் மோட்டார் பம்பு செட்டில் ஆரம்பித்து விவசாயம் சார்ந்த ஜவுளி தொழிலுக்கான உபகரணங்கள், ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரீஸ் என அனைத்து தொழில் துறைகளுக்குமான அடித்தளமாக தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படக்கூடிய கோயம்புத்தூரே இன்றளவும் இருந்துவருகிறது.

தொழில்துறையில் துணிச்சலான மேலாண்மை திறன், கடின உழைப்பு, தரமான தயாரிப்பு, எதிர்கால திட்டமிடல், நவீன சார்பு உள்ளிட்டவை கோயமுத்தூர் தொழில் நகரத்தின் வெற்றிக்கான குறியீடுகள். இப்படிப்பட்ட தனித்துவமான கோயமுத்தூர், தன் பெருமையை தக்க வைத்துக்கொள்ள தன்னை காலத்திற்கேற்ப புதுமைப்படுத்திக் (அப்டேட்) கொள்வது அவசியம். தொழில்துறை பல்வேறு சவால்களை எதிர்கொண்டிருக்கும் நிலையில், சவால்களை எதிர்த்து சாதனை படைக்க நவீன தொழில்நுட்பத்தை கோயம்பத்தூர் தொழில் நகரம் நாடி இருக்கிறது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...