கோவையில் சாலையில் காரை நிறுத்தி விட்டு தூங்கிய குடிமகன் - போலீசார் விசாரணை

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தில் போக்குவரத்து நிறைந்த சாலையில் காரை நிறுத்திவிட்டு, குடிபோதையில் தூங்கிக்கொண்டிருந்த தனியார் நிறுவன மேலாளரான ரஞ்சித் என்பவரை பிடித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.



கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை கவுண்டம்பாளையம் பகுதியில் கோவை நோக்கி வந்த கொண்டிருந்த கார் ஒன்று மேம்பாலத்திற்கு அருகில் சாலையிலேயே நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது. வாகனப்போக்குவரத்து அதிகமாக இருக்கக்கூடிய அந்த சாலையில் கார் நிறுத்தப்பட்டிருந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



இதைத் தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் காரின் உள்ளே பார்த்தனர். அப்போது ஒரு நபர் உறங்கிக் கொண்டிருந்துள்ளார். அந்த நபரை நீண்ட நேரமாக எழுப்ப முயற்சி செய்த போதிலும் அவர் எழுந்திருக்காததால், காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.



அதன் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் உறங்கிக் கொண்டிருந்த நபரை எழுப்ப முற்பட்டனர்.



காவல்துறையினரும் பொதுமக்களும் நீண்ட நேரமாக எழுப்பியும் அவர் எழுந்திருக்காததால் கார் கண்ணாடியை உடைத்தனர்.



அப்போது அந்த நபர் அதிக குடிபோதையில் இருந்தது தெரியவந்தது.



பின்னர், குடிபோதையில் இருந்த நபரை தட்டி எழுப்பி காரில் இருந்து வெளியேற்றிய காவல்துறையினர் போக்குவரத்தை சீரமைத்தனர்.



இது தொடர்பாக அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், போதையில் இருந்த அந்த நபர் கோவை வாகராயம்பாளையம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்பதும், தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணி புரிந்து வந்ததும் தெரியவந்தது.



மேலும் மன உளைச்சல் காரணமாக காலையிலேயே அதிகளவிலான மதுவை அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டி விபத்தை உண்டாக்கிவிட்டு பின்னர் வாகனத்தை ஓட்ட முடியாமல் சாலையிலேயே நிறுத்தி விட்டு உறங்கியதும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக காவல்துறையினர் ரஞ்சிடம் தொடர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...