தாராபுரம் ராஜவாய்க்காலில் சாக்கடை கழிவுநீர் கலப்பு - விவசாயம் பாதிக்கப்படுவதாக புகார்

தாராபுரம் நகருக்குள் செல்கின்ற ராஜ வாய்க்காலில் பொதுமக்கள் பயன்படுத்திய கழிவுநீர் கலந்து வருகிறது. வாய்க்காலில் வரும் கழிவு நீரை விவசாயிகள் விவசாயத்திற்கு பயன்படுத்தும்போது தக்காளி, வெண்டைக்காய், மிளகாய் மற்றும் நெற்பயிர்கள் கருகி வருவதாக, விவசாயிகள் புகார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் குமரேசன் தலைமையில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது இதில், 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.



இந்த கூட்டத்தில் மாடுகளை தாக்கும் கோமேரி நோயை கட்டுப்படுத்த கால்நடைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதேபோன்று அறுவடைக்கு தயாராக உள்ள நெல் கதிர்களை எலிகள் கடித்து பயிர்களை நாசம் செய்து வருவது குறித்தும் பல்வேறு விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை கோட்டாட்சியரிடம் எடுத்துரைத்தனர்.

கோட்டாட்சியர் அதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் விவசாயிகளின் குறைகளை சுற்றி காட்டி நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் பங்கேற்ற தமிழக கட்சி சார்பற்ற விவசாய சங்கத்தின் தலைவர் காளிமுத்து தலைமையில் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.



அதன்படி, தாராபுரம் உழவர் சந்தை சுற்றுவட்டார பகுதிகளில் நகராட்சி அனுமதியின்றி காய்கறி கடைகளை நடத்தி வரும் வியாபாரிகள் உழவர் சந்தைக்கு கொண்டு வரும் விவசாயிகளின் காய்கறிகளை உழவர் சந்தையில் விற்பனை செய்ய விடாமல் தடுத்து நடைபாதை கடைகளில் தனி நபர் வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

இதனால் உழவர் சந்தைக்கு கொண்டு வரும் விவசாயிகளின் விலை பொருள்களுக்கு உரிய விலை மற்றும் விற்பனை செய்வதில் சிரமம் ஏற்படுவதோடு, விவசாயிகள் கொண்டு வரும் காய்கறிகள் விற்பனையாகாமல் திரும்பக் கொண்டு செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதனால் உழவர் சந்தை சுற்றியுள்ள காய்கறி கடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று பொள்ளாச்சி சாலையில் நகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தின் முன்பு இட்டலி கடை, பழக்கடைகள் வைத்து பொதுமக்களின் போக்குவரத்திற்கு இடையூறாக சிலர் செயல்பட்டு வருகின்றனர். இதற்கு நகராட்சி மறைமுகமாக துணை போகிறது.

இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதுடன், ஹோட்டல் கழிவுகள், காய்கறி கழிவுகளை பள்ளி வளாகத்தின் முன்பே வியாபாரிகள் கொட்டி விட்டு சென்று விடுகின்றனர். இதனால் அழுகிய காய்கறியில் இருந்து பரவக்கூடிய பாக்டீரியா, வைரஸ் மூலமாக மாணவர்களுக்கு காய்ச்சல் மற்றும் பிற உடல் உபாதைகள் ஏற்படுகிறது. எனவே பள்ளி வளாகத்தின் முன்பு உள்ள கடைகளை அகற்றி தர வேண்டும் என கோரிக்கைவிடுத்தனர்.



தாராபுரம் நகருக்குள் செல்கின்ற ராஜ வாய்க்காலில் பொதுமக்கள் பயன்படுத்திய கழிவுநீர் கலந்து வருகிறது. வாய்க்காலில் வரும் கழிவு நீரை விவசாயிகள் விவசாயத்திற்கு பயன்படுத்தும்போது தக்காளி, வெண்டைக்காய், மிளகாய் மற்றும் நெற்பயிர்கள் கருகும் சூழல் ஏற்பட்டு வருகிறது. மேலும், கழிவு நீரில் விவசாயம் செய்வதால் விவசாய நிலம் பாதிக்கப்படுவதுடன் விவசாயிகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.

எனவே ராஜ வாய்க்காலில் வரும் கழிவு நீரை சுத்திகரிப்பு மையம் அமைத்து சுத்திகரிப்பு செய்யப்பட்ட பிறகு ராஜ வாய்க்காலில் விட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். தற்போது பருவ கால மாற்றத்தின் காரணமாக மாடுகளுக்கு அம்மை மற்றும் கோமாரி நோய் தாக்குதல் ஏற்பட்டு வருகிறது. இதற்கு கால்நடைத்துறை அதிகாரிகள் உடனடியாக நோய் முன் தடுப்பூசிபோட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எரகாம்பட்டி கிராமத்தில் பிஏபி வாய்க்காலில் இருந்து வரும் தண்ணீரை அந்தந்த பகுதியில் தனி நபர்கள் தடுத்து வைத்துள்ளனர். மேலும், எரகாம்பட்டி பகுதியில் அதிக ஓடை கற்கள் உள்ளன. இந்த ஓடை கற்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அனுமதியின்றி பல்வேறு ஊர்களில் இருந்து வந்து அனுமதியின்றி எடுத்துச் செல்கின்றனர். ஓடையில் கல் எடுப்பதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் வரைமுறைப்படுத்த வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்க கூட்டத்தில் கட்சி சார்பற்ற விவசாய சங்கத்தினர் மற்றும் உழவர் உழைப்பாளர் கட்சியினர் கோரிக்கைவிடுத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...