தேசிய தாய்மொழி தினம்: கோவையில் மாவட்ட அளவிலான இலக்கியப் போட்டி!

தேசிய தாய்மொழி தினத்தையொட்டி ஒண்டிப்புதூரில் உள்ள பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடந்த பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகளில் தலா 2 மாணவர்கள் தேர்வாகி, மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் ஒண்டிப்புதூரில் தேசிய தாய்மொழி தினத்தையொட்டி நடைபெற்ற மாவட்ட அளவிலான இலக்கிய போட்டிகளில் மாணவர்கள் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தினர்.



ஒண்டிப்புதூர் அடுத்த எஸ்.எஸ்.குளம் பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாவட்ட அளவிலான இலக்கியப் போட்டிகள் நடைபெற்றது.

இப்போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து 6 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பல்வேறு அரசுப் பள்ளிகளை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில், நடத்தப்பட்ட பேச்சுபோட்டி மற்றும் கட்டுரை போட்டிகளில் தலா 30 மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.



'கல்வியும் கல்லாமையும்' மற்றும் 'குழந்தைத் தொழிலாளி ஒழிப்பு' என்ற தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. கல்வித்துறையின் வழிகாட்டுதலின்படி நடத்தப்பட்ட இப்போட்டி கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.பூபதி மேற்பார்வையில் மற்ற மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

இதனிடையே, மாணவர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த பேச்சுப்பேட்டியில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு மற்றும் கல்வியின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் எண்ணங்களை வெளிப்படுத்தினர்.



இதில் தேர்வுக்குழுவின் பல்வேறு கட்ட ஆய்வுக்கு பிறகு வெற்றி பெற்றவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஒவ்வொரு போட்டியிலிருந்தும் 2 இறுதி போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...