கோவை மாநகரில் காவல் நிலையங்களை கண்காணிக்க புதிய வசதி அறிமுகம்!

காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்கள் மற்றும் புகார்தாரர்களை வரவேற்பாளர்கள் எவ்வாறு நடத்துகின்றனர் என்பதை, சி.சி.டி.வி., கேமரா உதவியுடன், உயர் அதிகாரிகள் நேரலையில் கண்காணிக்கும் வசதி கோவை மாநகரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


கோவை: காவல்நிலைய பணிகளை உயரதிகாரிகள் நேரடியாக கண்காணிக்கும் வசதி கோவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கோவை மாநகரில் உள்ள காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்கள் மற்றும் புகார்தாரர்கள் எவ்வாறு நடத்தப்படுகின்றனர் என்பதை, சி.சி.டி.வி., கேமரா உதவியுடன், உயர் அதிகாரிகள் நேரலையில் கண்காணிக்கும் வசதி கோவை மாநகரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் யாரும் விருப்பத்தோடு காவல் நிலையம் போவதில்லை. வேறு வழியின்றி புகார் தரவும், விசாரணைக்கும் செல்வோருக்குள் ஒரு விதமான அச்சமும், வேதனையும் இருப்பது இயற்கையே. அவ்வாறு வரும் எளிய மக்களுக்கு நம்பிக்கையும், துணிச்சலும் கொடுத்து, வரவேற்று உட்கார வைத்துப் பேசவும், புகார்களை கேட்டு உடனடி நடவடிக்கை எடுக்கவும், ஒவ்வொரு ஸ்டேஷனிலும், வரவேற்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தினமும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை, பணியில் இருக்கும் வரவேற்பாளர்கள், புகார்தாரரின் விபரம் கேட்டறிந்து பதிவு செய்துகொண்டு, அவரை சம்பந்தப்பட்ட காவல் அதிகாரியிடம் அனுப்பி வைக்க வேண்டும்.

புகார் அளித்து விட்டு, திரும்ப வரும்போதும், வரவேற்பாளர் அந்த நபரிடம் விசாரிக்க வேண்டும். புகாருக்கு பலன் கிடைத்ததா, என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்பதைக் கேட்டு பதிவு செய்வதும் அவசியம்.

இவ்வாறு செயல்படும்போது, காவல் நிலையம் குறித்து பொதுமக்கள் மத்தியில் நல்ல மதிப்பும், நம்பிக்கையும் ஏற்படும் என்பதால், இந்த நடவடிக்கைக்கு டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ள வரவேற்பாளர்கள், சரியான முறையில் செயல்படுகின்றனரா என்பதை உயர் அதிகாரிகள் கண்காணிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம், துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்களின் அலுவலகங்களில் சி.சி.டி.வி., கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. அந்த கேமராக்கள் அனைத்தும் பிரத்யேக மென்பொருளுடன் இணைக்கப்பட்டுள்ளன.

அவற்றின் உதவியுடன், வரவேற்பாளர்கள் பணியில் இருக்கின்றனரா, பொதுமக்கள் அமர நாற்காலிகள் போடப்பட்டுள்ளதா, உட்கார வைக்கப்படுகின்றனரா, புகார் அளிக்க வருபவர்களிடம் வரவேற்பாளர்கள் எப்படிப் பேசுகின்றனர் என்பதை அதிகாரிகள் நேரலையில் கண்காணிக்க முடியும்.

இந்த நடவடிக்கையால், போலீஸ் நடவடிக்கைகள் நேர்மையாகவும், வெளிப்படையாகவும், பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும் இருக்கும் என்று, அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். ஸ்டேஷன்களில் வரவேற்பாளர்களாக பணியாற்றும் போலீசாருக்கு விரைவில் பிரத்யேக சீருடையும் வழங்கப்படவுள்ளன.

சி.சி.டி.வி.,கண்காணிப்பும், சீருடையும் மாற்றத்தைக் கொண்டு வருமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...