திருப்பூர் அருகே வாய்க்காலில் மாயமான மகனை கண்டுபிடித்து தரக்கோரி எஸ்.பியிடம் மனு

திருப்பூர் அருகே நல்லூரை சேர்ந்த சங்கீதா என்பவரின் மகன் சஞ்சய், நண்பர்களுடன் ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள வாய்க்காலில் குளிக்க சென்றவர் காணவில்லை என்று, அவரது தாய் சங்கீதா திருப்பூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.



திருப்பூர்: ஆண்டிபாளையம் வாய்க்காலில் விழுந்து மாயமான மகனை கண்டுபிடித்து தரக்கோரி தாய், மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் நல்லூர் பகுதியை சார்ந்தவர் சங்கீதா. இவரது மகன் சஞ்சய்(19), திருப்பூர் சிக்கன்னா அரசு கலைக் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி நண்பர்களுடன் ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள வாய்க்காலில் குளிப்பதற்காக சென்றார்.

வாய்க்காலில் நண்பர்களுடன் குளித்த போது திடீரென சஞ்சய் நீரில் அடித்துச் செல்லப்படதாகவும், மேலும் நண்பர்கள் சஞ்சையை காப்பாற்ற முயற்சி செய்ததாகவும், ஆனால் நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் அவர்களால் சஞ்சயை மீட்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து அவிநாசி பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீயணைப்பு துறை உதவியுடன் நீரில் அடித்து செல்லப்பட்ட சஞ்சயை தேடினர். ஆனால் வாய்க்காலில் அதிக அளவில் நீர் செல்வதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இந்த நிலையில் சஞ்சயின் தாயார் சங்கீதா மற்றும் அவர்களது உறவினர்கள் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.



அதில் வாய்க்காலில் விழுந்து காணாமல் போன தனது மகனின் உடலை கண்டுபிடித்து தரக்கோரியும், அதற்காக ஆண்டிபாளையம் வாய்க்காலுக்கு வரும் நீரை நிறுத்தியோ அல்லது வேறு பகுதிக்கு மாற்றியோ விட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...