உடுமலையில் விதை, உரம் விற்பனையில் விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை!

திருப்பூர்: உரம் விற்பனையாளர்கள் சட்டத்தின் அனைத்து விதிகளையும் முறையாக பின்பற்ற வேண்டும், தடை செய்யப்பட்ட மருந்துகளின் பட்டியலை எழுதி வைத்துக்கொண்டு விற்பனையில் விழிப்புணர்வாக இருக்க வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட வேளாண் இயக்குநர் மாரியப்பன் தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரங்களில் சாகுபடிக்கு தேவையான விதை, பூச்சிக்கொல்லி மருந்து விற்பனைக்கு 75-க்கும் மேற்பட்ட தனியார் விற்பனை கடைகள் உள்ளன. மேலும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாகவும், உரங்கள் விற்பனை செய்து வருகின்றனர்.



இந்நிலையில் தோட்டக்கலை துறை சார்பில் விநியோகிக்கப்பட்ட பப்பாளி விதைகள் போலியானது என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார் தெரிவித்திருந்தனர். அதனடிப்படையில் மூன்று வட்டார விதை மற்றும் விற்பனையாளர்கள் தோட்டக்கலைத்துறை வேளாண்மை துறை விதைசான்று துறையினர், மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்ற சிறப்பு கூட்டம் உடுமலை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைபெற்றது.

இதில் பேசிய திருப்பூர் மாவட்ட வேளாண் இயக்குநர் மாரியப்பன், விதை, உரம் விற்பனையாளர்கள் சட்டத்தின் அனைத்து விதிகளையும் முறையாக பின்பற்ற வேண்டும், புதியதாக விதைகளை அறிமுகப்படுத்தும் போது தரம் குறித்து பரிசோதனைகளை செய்வது அவசியம் தடை செய்யப்பட்ட மருந்துகளின் பட்டியலை எழுதி வைத்துக்கொண்டு விற்பனையில் விழிப்புணர்வாக இருக்க வேண்டும்.

அனைத்து கடைகளிலும் இருப்பு மற்றும் விலைப்பட்டியல் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். கடைகளுக்கு, கடை விலை வித்தியாசம் இருக்கக் கூடாது. பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு பரிந்துரை செய்யப்படும் மருந்துகள் குறித்து விழிப்புணர்வு அவசியமாகும்.

எனவே வரும் காலங்களில் இது சார்ந்த பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மட்டும் விதை மற்றும் உரிமம், உரம் விற்பனைக்கான உரிமம் சான்று வழங்கப்படும். விதிமுறைகளை முறையாக பின்பற்றுவது குறித்து சிறப்பு அதிகாரிகள் குழுவினர் திடீர் ஆய்வு செய்யும் போது, விதிமுறை மீறல் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே விற்பனையாளர்கள், அனைத்து விதிமுறைகளையும் முறையாக பின்பற்றாவிட்டால் பாரபட்சமின்றி உரிமம் ரத்து செய்யப்படும், என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...