'சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்..!'- அதிகாரிகளுக்கு கோவை ஆட்சியர் உத்தரவு

கோவையில் நடைபெற்ற சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்புக்குழு ஆலோசனை கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடையே துண்டுபிரசுரங்கள், ஒலிபெருக்கி வாயிலாக தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.


கோவை: சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அறிவுறுத்தினார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்புக்குழு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி, தலைமையில் நடைபெற்றது.



இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாநகர காவல் துணை ஆணையர்கள் சந்தீஸ், பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா, வருவாய் கோட்டாட்சியர்கள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி பேசியதாவது:

சாலை விபத்துக்கள் ஏற்படாமல் தடுப்பதற்கும், உயிரிழப்புகள் ஏற்படாமல் பாதுகாப்பதற்கும் பல்வேறு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சாலை பாதுகாப்பு குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு ஓட்டுநர்களின் பொறுப்புகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் வாகனப் பெருக்கம் அதிகரித்துக் கொண்டிருப்பதால் சாலை பாதுகாப்புப் பணியினை மேம்படுத்துவது சம்மந்தமாகவும், விபத்துகளை தடுக்கும் பொருட்டும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வாகன ஓட்டிகளுக்கு உரிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்திடும் வகையில் மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் காவல் துறையினர் உள்ளிட்டோருடன் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது.

சாலை விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க இருசக்கர வாகனம் ஓட்டும் போது தலைக்கவசமும், நான்கு சக்கர வாகனம் ஒட்டும்போது சீட்பெல்ட்டும் அணிய வேண்டும். வாகன ஓட்டுநர்கள் கைபேசி பயன்படுத்தாமல் இருப்பது, சாலை விதிமுறைகளை முழுமையாக கடைபிடிப்பது போன்றவற்றின் மூலம் விபத்துகளில் இருந்து நம்மை பாதுகாக்கலாம்.

சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடையே துண்டுபிரசுரங்கள், ஒலிபெருக்கி வாயிலாக தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். சாலைகளில் தேவையான இடங்களில் மின்னும் ஒட்டுவில்லைகள், வேகத்தடை, பாதச்சாரிகள் நடைபாதை கோடு, எச்சரிக்கை பலகைகள் ஆகியவை அமைக்கப்படவேண்டும்.

அதேபோலவே ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள சாலைகளில் பழுது ஏற்பட்டிருந்தால் அவற்றை விரைவாக சரி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...