மக்கள் நீதி மய்யம் கட்சியின் 6ஆம் ஆண்டு துவக்க விழா - பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி கொண்டாட்டம்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் 6ஆம் ஆண்டு துவக்க விழாவையொட்டி கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோளை ஏற்று கிராமங்கள் தோறும் கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கோவையில் கட்சி கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.


கோவை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் 6ஆம் ஆண்டு துவக்க விழாவையொட்டி அக்கட்சியின் சார்பில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆறாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கட்சியின் கொடி பறக்க வேண்டும் என்று தொண்டர்களுக்கு கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கிராமங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆறாம் ஆண்டு துவக்க விழாவையொட்டி கொடியேற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



இதன் ஒரு பகுதியாக கோவை வடகிழக்கு மாவட்டம் சார்பில் சித்ரா பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியினர் சார்பில் பொதுமக்களுக்கு மரகன்றுகளை வழங்கினர்.

வடகிழக்கு மாவட்ட செயலாளர் மனோன்ரம்யன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் துணை தலைவர் தங்கவேல் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநிலச் செயலாளர் பரப்புரை மேற்கொண்டார்.

மேலும் இந்நிகழ்வில் டாக்டர். அனுஷாரவி, மண்டல செயலாளர்கள் ரங்கநாதன், சித்திக், செல்வ தங்கம், ஸ்ரீதர், அருணா, ரம்யா உள்ளிட்ட கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...