அன்னூர் - புளியம்பட்டி சாலையில் பைக் மீது கார் மோதல் - பாட்டி, பேரன் பலி!

அன்னூர் - புளியம்பட்டி சாலையில் பைக்கில் மூதாட்டியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது பின்னால் வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில், மூதாட்டி மற்றும் அவரது பேரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


கோவை: அன்னூர் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் மூதாட்டி மற்றும் பேரன் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

கோவை அன்னூர் அய்யப்பரெட்டி புதூரை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் ஜெய்ராம் (12). அங்குள்ள தனியார் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வருகிறாரு. ரமேஷின் தாயார் வெள்ளையம்மாளுக்கு (98) உடல் நிலை சரியில்லாமல் இருந்துள்ளது.

இதனால் அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பைக்கில், அழைத்து செல்ல முடிவு செய்து, மூவரும் பைக்கில் சென்றுள்ளனர். இவர்கள் சென்ற பைக் அன்னூர்-புளியம்பட்டி சாலையில் உள்ள அண்ணா நகர் அருகே வந்தபோது, பின்னால் வேகமாக வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து பைக் மீது மோதியது.

இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து மூன்று பேரையும் மீட்டு, சிகிச்சைக்காக அன்னூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவன் ஜெய்ராமை பரிசோதனை செய்த, மருத்துவர்கள், சிறுவன் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மேலும் பலத்த காயம் அடைந்த வெள்ளையம்மாளுக்கு முதலுதவி, அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளையம்மாளும் பரிதாபமாக இறந்தார். காயங்களுடன் ரமேஷ் அன்னூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்து குறித்து அன்னூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...