போலீசாரிடமிருந்து தப்பிய கொள்ளையன் கைது - கோவை தனிப்படையினர் அதிரடி!

திருப்பூரில் இருந்து கோவை நீதிமன்றத்திற்கு பேருந்தில் அழைத்து சென்ற போது, தப்பியோடிய கொள்ளையன் தாலிப் ராஜாவை, தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் கோவையில் கைது செய்யப்பட்டார்.


கோவை: திருப்பூரில் இருந்து பேருந்தில் கோவைக்கு அழைத்து வந்த போது தப்பியோடிய கொள்ளையனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அடுத்த வேல்வார் பேட்டையை சேர்ந்தவர் தாலிப் ராஜா(28). இவர் கடந்த ஆண்டு திருப்பூர் மாவட்டத்தில் 2 செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பாக நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட தாலிப் ராஜாவை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில், ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், கோவை மத்திய சிறையில் உள்ள தாலிப் ராஜாவை வழக்கு ஒன்றில் ஆஜர்படுத்துவதற்காக கடந்த 7ஆம் தேதி திருப்பூர் போலீசார், தாலிப் ராஜா உட்பட 4 பேரை திருப்பூருக்கு பேருந்தில் அழைத்து சென்றனர்.

அங்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு 4 பேரையும் மீண்டும் பேருந்தில், கோவைக்கு அழைத்து வந்தனர். பேருந்து சிங்காநல்லூர் அருகே உள்ள இருகூர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது பேருந்தில் இருந்த தாலிப் ராஜா திடீரென ஜன்னல் வழியாக ஏறி குதித்து தப்பினார்.

உடனே போலீசார் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் உஷாரான சிங்காநல்லூர் போலீசார் அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அவரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இன்று காலை கோவை பகுதியில் பதுங்கி இருந்த அவரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...