கோழி கழிவுகளை கொட்டுவதை தடுக்க வேண்டும்..! - கோவை மாநகராட்சியில் சிபிஐ மனு!

கோவை மாநகராட்சியின் 83ஆவது வார்டு பகுதியில் உள்ள ரயில்வே பாலம் அருகில் சிலர் கோழி கழிவுகளை கொட்டுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.


கோவை: மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் கோழி கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இன்று காலை மேயர் கல்பனா தலைமையில் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது.

மேயரிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, கோவை மாநகராட்சியின் 83ஆவது வார்டுக்குட்பட்ட சோமசுந்தரம் ஆலை, காளீஸ்வரா ஆலை பாதையில் உள்ள ரயில்வே பாலம் அருகில் சிலர் கோழி கழிவுகளை கொட்டுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

அந்த பாதை வழியாக நடக்க முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது. எனவே உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த பாதையில் இருபுறமும் கார் மற்றும் லாரிகளை விரிசையாக நிறுத்தி வருவதால் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே சாலை ஓரங்களில் வாகனங்கள் நிறுத்தாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் இந்த வார்டு பகுதியில் இரவு நேரத்தில் குடிநீர் வழங்குவதால், கண் விழித்திருந்து தண்ணீர் பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு நேரத்தில் தண்ணீர் வழங்குவதை தவிர்த்து, பகல்நேரத்தில் தண்ணீர் வழங்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

மேலும் இதேபோல் சொத்து வரி, குடிநீர் வரி, மின்விளக்கு, சாலை வசதி என பொதுபிரச்சினைகள் தொடர்பாக 30-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை மக்கள் மேயரிடம் அளித்தனர். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட மேயர் உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...