வால்பாறை - அதிரப்பள்ளி சாலையில் வலம் வரும் காட்டு யானை - வாகன ஓட்டிகள் அச்சம்!

வால்பாறை அதிரப்பள்ளி சாலையில் விரிவாக்க பணியின் போது திடீரென வந்த ஒற்றை காட்டு யானையை கண்ட ஊழியர்கள் அச்சமடைந்து, அலறியடித்து ஓடி பாறைகள் மீது ஏறி பாதுகாப்பாக நின்றுள்ளனர். தகவலறிந்து வந்த வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே மழுக்கபாறை - அதிரப்பள்ளி சாலையில் சுற்றித்திரியும் ஒற்றை காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணித்து வருகின்றனர்.

வால்பாறை அருகேயுள்ள அதிரப்பள்ளி வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக ஒற்றைக் காட்டு யானை வாகனங்களை மறித்தும் சாலையில் நடந்தும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் இன்று மதியம் கீழ் சோலையார் அணை பகுதியில் சாலை விரிவாக்க பணிகளை ஊழியர்கள் மேற்கொண்டிருந்தனர்.



அப்பொழுது சாலையில் தீடீரென வந்த ஒற்றை காட்டு யானையை கண்ட ஊழியர்கள் அச்சத்தில் அருகில் இருந்த பாறைகள் மேல் ஏறி பாதுகாப்பாக நின்றனர். பின்னர் யானை பாலத்தை கடந்து சென்றது.

இந்நிலையில் தகவலறிந்து வந்த வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே வால்பாறையில் இருந்து அதிரப்பள்ளி செல்லும் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.

பெரிய கனரக வாகனங்களின் பின் இருசக்கர வாகனங்கள் மற்றும் சிறிய வாகனங்கள் செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...