கோவையில் வரி செலுத்தாத 15 கடைகளுக்கு சீல் - மாநகராட்சிக்கு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!

கோவை அரசு கலைக்கல்லூரி அருகேயுள்ள சேரன் டவர் வணிக வளாகத்தில் சுமார் 98 லட்சம் ரூபாய் வரை வரி செலுத்தாமல் செயல்பட்டு வந்த 15 கடைகளுக்கு மத்திய மண்டல உதவி ஆணையர் மகேஷ் கனகராஜ் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.



கோவை: கோவையில் நீண்ட காலமாக வரி செலுத்தாத 15 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாநகராட்சிக்கு நீண்ட காலமாக வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ள கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், வரி செலுத்துவதற்காக சிறப்பு முகாம்களும் மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டன. அந்த முகாம்களை பயன்படுத்தி கொண்டு மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை உடனடியாக செலுத்த வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் வரி செலுத்தாத கடைகள், வணிக வளாகங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனிடையே கோவை அரசு கலைக்கல்லூரி அருகில் உள்ள சேரன் டவர் வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் 88 கடைகள் மாநகராட்சிக்கு வரி செலுத்தாமல் இருந்து வந்துள்ளன.



மொத்தம் 98 லட்சம் ரூபாய் வரி நிலுவை வைத்திருந்ததால் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உத்தரவின் பேரில் மத்திய மண்டல உதவி ஆணையாளர் மகேஷ் கனகராஜ் தலைமையில் 10க்கும் மேற்பட்ட மாநகராட்சி அலுவலர்கள், அக்கடைகளுக்கு சீல் வைத்தனர்.



இன்று 18 கடைகளுக்கு சீல் வைக்கச் சென்ற நிலையில் அதில் 3 கடைகள் கடைசி நேரத்தில் வரி செலுத்தியதால் 15 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன. மீதமுள்ள கடைகளுக்கு நாளை சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைக்கச் சென்றதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...