நண்பர்களின் சிம்கார்டுகளை பயன்படுத்தி நூதன மோசடி - கோவை இளைஞரை தட்டித்தூக்கிய போலீஸ்!

கோவையில் நண்பர்களின் சிம் கார்டுகளை போர்ட் மாற்றி கிரிடெட், டெபிட் கார்டு எண்களைத் திருடி தங்க பிஸ்கட், ஆன்லைன் லோன், ஃபிரிட்ஜ், புளூட்டூத் ஸ்பீக்கர், ஃபோன் ஆர்டர் செய்து மோசடி செய்த விக்னேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவையை சேர்ந்த வினோத்குமார், ஸ்டான்லி ஜோன்ஸ் மற்றும் ஆனந்தகுமார் ஆகியோர் தனியார் நிறுவன ஊழியர்கள். இவர்களின் தொலைபேசி எண்களை பயன்படுத்தி அவர்களுக்கே தெரியாமல், கிரிடிட் கார்டு, டெபிட் கார்டுகளை பயன்படுத்தியதோடு, லோன் அப்ளிகேஷனிலிருந்து பணம்பெற்று மோசடி செய்து விட்டதாக சிட்டி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் தந்திருக்கின்றனர்.

வழக்கமாக, ஓடிபி கேட்டோ அல்லது ஃபோனை ஹேக் செய்து திருடியோ குற்றங்கள் நடக்கும். ஆனால், உடமைகள் திருடு போகாமலே குற்றம் நடந்த நிலையில் போலீசார் உற்று நோக்கினர்.



இது வித்யாசமான சைபர் குற்றமாக இருந்த நிலையில், மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் அடிப்படையில், இணைய வழி குற்ற பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் அருண் தலைமையில், உதவி ஆய்வாளரான சிவராஜ் பாண்டியன் உள்ளிட்டோர் அடங்கிய சைபர் கிரைம் போலீசார் குற்றவாளிக்கு வலை வீசி தேடுதல் வேட்டையில் இறங்கினர்.



அதனடிப்படையில் 465, 468, 471, 419, 420 IPC 66C 66D IT Act ல் வழக்கு பதிவு செய்த போலீசார், குற்றவாளியை அறிவியல் தொழில்நுட்ப உதவியுடன் கண்காணித்ததில், விக்னேஷ் (வயது31) என்பவரை கைது செய்திருக்கின்றனர். அவரிடம் சிட்டி சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.

கோவையில் ட்ராவல்ஸ் நடத்தி வரும் நபர் விக்னேஷ். தன்னுடன் பழகி வந்த நண்பர்களின் ஃபோன், கிரிடிட், டெபிட் கார்டுகளை ஆவணங்களை அவ்வப்போது நோட்டமிடுவது வழக்கம்.

அதனடிப்படையில், நண்பர்களின் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, ஸ்மார்டு கார்டுகளின் ஃபோட்டோக்களை கேமராவில் படம்பிடிப்பார். உடன் பழகும் நண்பர்களின் மொபைல் நம்பர்களை, அவர்களுக்கு தெரியாமல் எடுத்துக் கொண்டு, அவர்களின் தொலைபேசி எண்களை அவர்களுக்கு தெரியாமல் போர்ட் (PORT) செய்வார். அந்த எண்களை குறிப்பெடுத்து, அதன் மூலமாக புதிதாக சிம் பெற்றுக்கொண்டு மோசடியை ஆரம்பிப்பது வாடிக்கையாக வைத்துள்ளார்.

அதாவது விக்னேசிடம், அவனது நண்பர்களின் டெபிட், கிரிடிட் கார்டுகளின் நெம்பர் மற்றும் அதனுடன் அட்டாச் செயப்பட்ட மொபைல் எண்கள் இருக்கும். பொருட்களை வாங்கவோ பண பரிவர்தனை செய்யவோ, கார்டு நெம்பர் போட்டால், போர்ட் மாற்றப்பட்ட சிம்முக்கு ஓடிபி மெசேஜ் வரும். உடனே அதனை பயன்படுத்தி வங்கி கடன் அட்டை கணக்குகள் மற்றும் ஆன்லைன் அப்ளிகேஷனுக்கு அப்ளை செய்வார். அதிலிருந்து, கிரெடிட், டெபிட் கார்டு மூலம் பணம் பெற்று மோசடியில் ஈடுபடுவார்.

ஆன்லைனில் தங்க பிஸ்கட், ஃபிரிட்ஜ், வாசிங் மெசின் போன்ற ஹோம் அப்ளையன்ஸ்களை வாங்கியுள்ளார். ஓடிபி பண பரிவர்தணைக்கு நண்பர்களின் அலைபேசி இருந்தாலும் பொருட்கள் டெலிவரிக்கு விக்னேஷ் தன் தொடர்பு எண்ணைத் தந்துள்ளார். அதனை ட்ரேக் செய்த போலீசார் விக்னேசை கைது செய்துள்ளனர்.



நூதன கொள்ளையன் விக்னேசிடமிருந்து மொபைல் போன்கள், மின்னணு சாதனங்கள், பல்வேறு சிம்கார்டுகள், வாகன உரிமங்கள், கார்கள் 3, empty electronic chipset cards ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதுபோன்று யாரேனும் பாதிக்கப்பட்டிருப்பின் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்குமாறும் கோவை மாநகர காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...