கோவை அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் - அனைத்து வகுப்புகளும் ரத்து!

கோவை மருதமலை சாலையில் உள்ள சட்டக்கல்லூரியில் மாணவர்கள் போராட்டம் நேற்று தொடங்கி இன்றும், தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், சட்டக்கல்லூரியில் அனைத்து வகுப்புகளும் ரத்து செய்யப்படுவதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.


கோவை: கோவை சட்டக் கல்லூரியில் மாணவர்கள் போராட்டம் காரணமாக அனைத்து வகுப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை அரசு சட்ட கல்லூரியில் எல்.எல்.எம். ஹரிதா என்ற மாணவி கல்லூரியில் சேரும் பொழுது யூ.ஜி.சான்றிதழ் கொடுத்ததாகவும் அதை காணவில்லை என்று கல்லூரி சார்பாக கடந்த மாதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து, அதே கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் சேக் முகமது என்பவர் கேட்க சென்ற போது, கல்லூரி ஊழியர்களை தகாத வார்த்தையில் திட்டியதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், கல்லூரி ஊழியர்கள் முதல்வரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர்.

அதன்பேரில், வடவள்ளி காவல் நிலையத்தில் கல்லூரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் கொடுத்த புகாரில், ஷேக் முகமது மற்றும் ஹாரிதா மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து, இருவரையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளனர்.

மேலும், காரணம் இல்லாமல் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் தரணிஸ் என்ற மாணவனை சஸ்பெண்ட் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனை கண்டிக்கும் விதமாக, சட்டக் கல்லூரி வளாகம் முன்பு மாணவர்கள் கூடி முதல்வரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று பிற்பகல் கல்லூரி வளாகம் முன்பு தொடங்கிய மாணவர்கள் போராட்டம், இரவு முழுவதும் தொடர்ந்தது. மேலும், இன்றும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சட்டக் கல்லூரி வளாகம் முன்பு வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில் நிர்வாக காரணங்களை முன்னிட்டு இன்று அனைத்து வகுப்புகளும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...