மதுக்கரை அருகே முகாமிட்டுள்ள மக்னா யானை - 8 குழுக்கள் அமைத்து வனத்துறை தீவிர கண்காணிப்பு!

தருமபுரியில் விளைநிலங்களை சேதப்படுத்தி வந்த மக்னா யானை பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்ட நிலையில் மீண்டும் வெளியேறி, மதுக்கரை அருகே மோகன் நகரில் முகாமிட்டுள்ளது. அதனை வனத்துறை 8 குழுக்களை அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகிறது.



கோவை: கோவை மாவட்டம் மதுக்கரை அருகே முகாமிட்டுள்ள மக்னா யானையை வனத்துறை தீவிரமாக கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த மாதம் மக்னா காட்டு யானை ஒன்று ஊருக்கு புகுந்து அட்டகாசம் செய்து வந்தது.

இந்நிலையில் சின்ன தம்பி என்ற கும்கி யானையை வைத்து வனக்குழுவினர் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி அந்த மக்னா யானையை பிடித்தனர். பிடிபட்ட யானை டாப்சிலிப் அருகே உள்ள வரகளியார் வனப்பகுதியில் 6ஆம் தேதி விடப்பட்டது.

இதனையடுத்து, வனத்துறை அதிகாரிகள் தனிக்குழு அமைத்து அந்த மக்னா காட்டு யானையை கண்காணித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த யானை வனத்தை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.



இதனிடையே சேத்துமடை கிராமம் வழியாக நுழைந்த யானை, நல்லூத்துக்குளி, கா.க.புதூர், ஆத்து பொள்ளாச்சி, மன்னூர் ராமநாதபுரம் பகுதியை கடந்து மதுக்கரை சாலையை கடந்து மோகன் நகருக்குள் வந்து முகாமிட்டுள்ளது.



இந்நிலையில், அந்த யானையை வனத்துறையினர் 8 குழுக்கள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தற்போது, அந்த யானை ஆரோக்கியமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த யானை குனியமுத்தூர், இடையர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உலா வரும் நிலையில் அப்பகுதியில் உள்ள டிரம்களில் தண்ணீர் பருகியும் மர கிளைகளை உடைத்தும் குடியிருப்பு பகுதியில் உலா வந்து கொண்டிருக்கிறன. தர்மபுரி பகுதியில் பயிரை மேய்ந்து பழக்கபட்டதனால் வனத்தினை விட்டு வெளியேறி விளை நிலங்களில் உலா வருகின்றது.



யானையால் இதுவரை மனித முரண் ஏற்படவில்லை. ஆனாலும் பாதுகாப்பாக இருக்க பொதுமக்கள், விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



யானை தற்போது வெயில் காரணமாக ஓய்வெடுத்து வருவதாகவும், யானையின் நடமாட்டத்தை வனத்துறை கூர்ந்து கவனித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...