பருத்திக்கான விலை முன்னறிவிப்பு வெளியீடு - கோவை வேளாண் பல்கலை அறிவிப்பு

பருத்திக்கான விலை முன்னறிவிப்பின் படி, மார்ச் முதல் ஜூன் 2023 வரை பருத்தியின் சராசரி பண்ணை விலை குவிண்டாலுக்கு ரூ.7000 முதல் ரூ.7500 வரை இருக்கும் என்று கோவை வேளாண் பல்கலை கணித்துள்ளது.


கோவை: கோவை வேளாண் பல்கலைக்கழத்தின் விலை முன்னறிவிப்பு திட்டத்தின் படி, பருத்தியின் சராசரி பண்ணை விலை குவிண்டாலுக்கு ரூ.7000 முதல் ரூ.7500 வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டமானது, பருத்திக்கான விலை முன்னறிவிப்பை உருவாக்கியுள்ளது.

சர்வதேச பருத்தி ஆலோசனை குழு, உலகளாவிய பருத்தி நுகர்வு 23 மில்லியன் டன்கள் எனவும், இது உற்பத்தி 24.2 மில்லியன் டன்களை விட 1.2 மில்லியன் டன்கள் குறைவாகும் என அறிவித்துள்ளது.

அமெரிக்க வேளாண் துறையின் அறிக்கையின்படி, 2020-21-ஆம் ஆண்டில் உலக பருத்தி உற்பத்தி 24.9 மில்லியன் டன்களாக இருக்கும். இதில் சீனாவும் இந்தியாவும் இணைந்து பாதிக்கு மேலாக பங்கு வகிக்கின்றன.

பருத்தி இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட 11 சதவீத வரி காரணமாக, இந்தியாவில் பருத்தி இறக்குமதி 10 லட்சம் பொதிகளாக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 9 சவீதம் குறைவாகும். இந்தியாவில் பருத்தி ஏற்றுமதி 46 லட்சம் பொதிகளாக உள்ளது. இது கடந்த ஆண்டை விட 59 சதவீதம் குறைவாகும்.

வங்கதேசம், சீனா, வியட்நாம், பாகிஸ்தான் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு இந்தியா பருத்தியை ஏற்றுமதி செய்கிறது. இந்திய பருத்தி கழகத்தின் படி, இந்தியாவில் பருத்தி உற்பத்தி 2020-21-ஆம் ஆண்டில் 352லட்சம் பொதிகளிருந்து 2021-22 ஆம் ஆண்டு பருத்தி பருவத்தில் (அக்டோபர்-செப்டம்பர்) 315 லட்சம் பொதிகளாக குறைந்துள்ளது. பஞ்சாலைகளின் குன்றிய தேவை காரணமாக, பருத்தியின் விலை சமீப காலமாக சற்று குறைந்து காணப்படுகிறது.

தமிழ்நாட்டில், பருத்தி முக்கியமாக மாசிப்பட்டம், ஆடிப்பட்டம் மற்றும் கார்த்திகை பட்டம் ஆகிய பருவங்களில் விதைக்கப்படுகிறது. தற்போது, ஆடிப்பட்டம் முடியும் தருவாயில் மாசிபட்டம் விதைப்பு தொடங்கி உள்ளது.

தமிழ்நாடு பருத்தியின் முக்கிய நுகர்வோராக திகழ்கிறது. 2021-22 ஆம் ஆண்டில் 1.48 லட்சம் ஹெக்டரில் பயிரிடப்பட்டு 3.6 லட்சம் பொதிகள் உற்பத்தி செய்துள்ளது, இது கடந்த ஆண்டை விட பரப்பளவில் 7.5 சதவீதமும், உற்பத்தியில் 6 சதவீதமும் அதிகரித்துள்ளது. பருத்தி ஆலையாளர்கள் தங்களது தேவைகேற்ப குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் கர்நாடகாவிலிருந்து கொள்முதல் செய்கின்றனர்.

விலை முன்னறிவிப்புத் திட்டமானது, விவசாயிகள் விதைப்பு மற்றும் விற்பனை முடிவுகளை எடுக்க ஏதுவாக கடந்த 26 ஆண்டுகளாக கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை மையத்தில் நிலவிய பருத்தியின் விலை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது.

ஆய்வுகளின் அடிப்படையில், பருத்தியின் சராசரி பண்ணை விலை மார்ச் முதல் ஜூன் 2023 வரை குவிண்டாலுக்கு ரூ.7000 முதல் ரூ.7500 வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் மேற்கூறிய சந்தை ஆலோசனை அடிப்படையில், விதைப்பு முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர்.

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்

உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை தகவல் மையம்

வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,

கோயம்புத்தூர்- 641 003

தொலை பேசி – 0422–2431405

இயக்குனர் மற்றும் முனை அதிகாரி

தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டம்

நீர் நுட்ப மையம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,

கோயம்புத்தூர்- 641 003

தொலை பேசி – 0422–6611278

தொழில்நுட்ப விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்

பேராசிரியர் மற்றும் தலைவர், பருத்தி துறை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

கோயம்புத்தூர் 641003

தொலை பேசி – 0422 – 2456297

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...