வால்பாறையில் சமுதாய வளைகாப்பு விழா - 60 கர்ப்பிணி பெண்களுக்கு தட்டு சீர்

கோவை வால்பாறையில் உள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில், சுற்றுவட்டார எஸ்டேட் பகுதியில் உள்ள 60 மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் அணிவித்து தட்டு சீர் வழங்கப்பட்டன.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சமூக நலத்துறை சார்பாக சமுதாய வளைகாப்பு நடைபெற்றது.



வால்பாறையில் உள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் சுமார் 60க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சமூக நலத்துறை சார்பாக வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்தநிகழ்ச்சியில் வால்பாறை நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி மற்றும் நகராட்சி ஆணையாளர் பாலு மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதியில் உள்ள கர்ப்பிணி பெண்கள் இணைந்து இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அப்போது, அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து உணவுகள் மற்றும் குழந்தை பெறும் காலங்களில் எவ்வாறு இருக்க வேண்டும் எவ்வாறு உணவருந்த வேண்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.



மேலும் அவர்களுக்கு வளையல் அணிவித்து, பொட்டு வைத்து, தட்டு சீர் வழங்கப்பட்டது.

இதில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ரதி பிரியா, திட்ட ஒழுங்கிணைப்பாளர் அனீஸ் குமார், மேற்பார்வையாளர் நாகஜோதி மற்றும் திலகவதி ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...