டெல்லியில் தமிழ் மாணவர்கள் மீது தாக்குதல் - ஏபிவிபி அமைப்பை தடை செய்யக்கோரி கோவையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய ஏபிவிபி அமைப்பை தடை செய்யக்கோரி கோவை அரசு கலைக்கல்லூரி முன்பு அனைத்து முற்போக்கு மாணவர் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை: டெல்லியில் தமிழ் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய ஏபிவிபி அமைப்பை தடை செய்ய கோரி கோவையில் மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற இருதரப்பு மாணவர்கள் தாக்குதலில் ஏபிவிபி அமைப்பை சேர்ந்த மாணவர்கள் தமிழ் மாணவர்கள் மீது கடும் தாக்குதல் நடத்தினர்.

மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த பெரியார், காரல் மார்க்ஸ் போன்றவர்களின் புகைப்படங்களை சேதப்படுத்திய வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தமிழ் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கும், புகைப்படங்களை சேதப்படுத்தியதற்கும் அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.



தமிழ் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியும், பெரியார், காரல் மார்க்ஸ் போன்றவர்களின் புகைப்படங்களை சேதப்படுத்திய ஏபிவிபி அமைப்பை தடை செய்ய வலியுறுத்தி கோவை அரசு கலைக்கல்லூரி வளாகம் முன்பு அனைத்து முற்போக்கு மாணவர் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தமிழ் மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், ஏபிவிபி அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...