கோரிக்கைகளை ஏற்றதால் முடிவுக்கு வந்த கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

கோவை சட்டக் கல்லூரியில் 3 மாணவர்கள் உரிய காரணம் இன்றி இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கல்லூரி நிர்வாகம் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டதால் 24 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வந்த மாணவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது.


கோவை: கோவை சட்டக்கல்லூரி நிர்வாகம் மாணவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டதால் மாணவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது.

கோவை மருதமலை பகுதியில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் மாணவர்கள் ஷேக் முகமது மற்றும் அவரது மனைவி ஹரிதா. இந்த நிலையில், ஹரிதாவின் டிசி பிரச்சனை குறித்து கல்லூரி அலுவலர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாக வடவள்ளி காவல் நிலையத்தில் கல்லூரி நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டு இருவரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

மேலும் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் தரணீஸ் என்ற மாணவரும் உரிய விளக்கம் இன்றி இடைநீக்கம் செய்யப்பட்டதாக மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் உரிய காரணங்கள் இன்றி மூன்று மாணவர்களையும் சஸ்பெண்ட் செய்த கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து நேற்று மதியம் முதல் சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் இதனை காரணம் காட்டி மேற்கொண்டு எந்த மாணவர்கள் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும், இது குறித்தான விசாரணைக் குழுவில் மாணவர்கள் தரப்பில் இருந்து மாணவர்களையும் நியமிக்க வேண்டும் எனவும் கோரிக்கையை முன் வைத்திருந்தனர்.



நேற்று இரவிலும் கல்லூரி வளாகத்திற்குள் மாணவர்களின் உள்ளிருப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது.



இந்நிலையில் இன்று காலையும் போராட்டம் நீடித்ததால் நிர்வாக காரணங்களுக்காக இன்று ஒரு நாள் பயிற்று வகுப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக கல்லூரி நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வடவள்ளி காவல் ஆய்வாளர், ஷேக் முகமது மற்றும் ஹாரிதா மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை குறித்து மாணவர்களின் கோரிக்கையுடன் காவல்துறை சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் விரைந்து எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.



மேலும் இது குறித்தான விசாரணைக் குழுவில் மாணவர்கள் சார்பாக மாணவர் பிரதிநிதி நிச்சயமாக இடம்பெறுவார் என கல்லூரி சார்பிலும் உறுதியளிக்கப்பட்டது.

இதனை அடுத்து 24 மணி நேரம் தொடர்ந்து நடந்து வந்த போராட்டம் தற்பொழுது முடிவுக்கு வந்தது. போராட்டத்தை மாணவர்கள் கைவிட்ட நிலையில் நாளை காலை முதல் கல்லூரி வழக்கம் போல் இயங்கும் என கல்லூரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...