கூடலூர் அருகே வலம் வரும் மக்னா யானை - வனத்திற்குள் விரட்ட 2 கும்கி யானைகள் வரவழைப்பு!

கூடலூர் அருகே பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வரும், மக்னா யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட முதுமலையிலிருந்து இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.



நீலகிரி: கூடலூர் அருகே விவசாய நிலங்களை சேதப்படுத்தி வரும் மக்னா யானையை விரட்ட வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் யானைகள் உணவு தேடி வனப்பகுதியிலிருந்து வெளியேறி ஊருக்குள் வருவது அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஸ்ரீ மதுரை ஊராட்சிக்குட்பட்ட தேன் வயல், குளில் வயல், போஸ்பாரா போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே இரவு நேரங்களில் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய மக்னா யானை ஊருக்குள் வந்து, பயிர்களைச் சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.



குறிப்பாக கடந்த இரண்டு நாட்களாக வனத்துறையினர் குழுக்களாகப் பிரிந்து இரவு, பகலாக அந்த ஒற்றை மக்னா யானையை கண்காணித்து வந்த நிலையில், அந்த யானையை விரட்ட முதுமலை யானைகள் முகாமிலிருந்து கணேசன் மற்றும் கிருஷ்ணா ஆகிய இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...