கோவை பாரதியார் பல்கலை விடுதி மாணவிகள் திடீர் போராட்டம் - உணவு, தண்ணீர் முறையாக வழங்கவில்லை என குற்றச்சாட்டு!

கோவை மருதமலையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக விடுதிகளில் மாணவிகளுக்கு, தரமற்ற உணவு, தண்ணீர் வழங்கப்படுவதாக கூறி பல்கலைக்கழக வளாகம் முன்பு 50க்கும் மேற்பட்ட மாணவிகள் கண்டன பதாகைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழக விடுதிகளில் முறையாக உணவு வழங்கப்படாததை கண்டித்து மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மருதமலை பகுதியில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் மூன்று விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு சுமார் 1500க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர்.

3 விடுதிகளில் உள்ள மாணவிகளுக்கும் தனித்தனியாக உணவு சமைத்து வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது மூன்று விடுதிகளுக்கும் சேர்த்து உணவு சமைக்கப்பட்டு விநியோகிக்கப்படுவதால் உரிய நேரத்தில் உணவு வழங்கப்படுவதில்லை என கூறப்படுகிறது.

மேலும் உணவு தரமற்ற முறையில் இருப்பதாகவும் கூறி பல்கலைக்கழக வளாகம் முன்பு விடுதி மாணவிகள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் திடீரென கண்டன பதாகைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தரமான உணவு உரிய நேரத்தில் வழங்கப்பட வேண்டும் எனவும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் சரியாக இல்லை என்பதால் அதனையும் உடனடியாக சரி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

மேலும் கழிப்பிடங்களை சுழற்சி முறையில் சுத்தம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்களை எழுப்பினர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வடவள்ளி காவல்துறையினர் மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் பின்னர் மாணவர்களை அழைத்து கல்லூரி நிர்வாகம் பேச்சு வார்த்தை நடத்தியது.

அப்போது மாணவர்களின் கோரிக்கைகள் அனைத்திற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரி நிர்வாகம் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

திடீரென நடைபெற்ற இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...