அன்னூர் முகாமில் ரூ.1.51 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்!

அன்னூர் பகுதியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், பல்வேறு அரசு துறைகள் சார்பில் ரூ.1.51 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, பயனாளிகளுக்கு வழங்கினார்.


கோவை: கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் ரூ.1.51 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வழங்கினார்.

அன்னூரை அடுத்த காரேகவுண்டன்பாளையத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கலந்துகொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.



மேலும் இந்நிகழ்வில் 465 பயனாளிகளுக்கு 1.51 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன்படி, வருவாய் துறையின் சார்பில் 77 பயனாளிகளுக்கு 60.90 லட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.

சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 124 பயனாளிகளுக்கு 14.88 லட்சம் மதிப்பில் உதவித்தொகை பெறுவதற்கான ஆணை, 25 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகள், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 10 விவசாயிகளுக்கு 1.26 லட்சம் மதிப்பில் மானிய உதவி தொகையை வழங்கினார்.

அதேபோல், தோட்டக்கலைத் துறையின் சார்பில் 50 பயனாளிகளுக்கு 8.46 லட்சம் மதிப்பில் மானிய உதவி தொகை, ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ஒரு பயனாளிக்கு 2.70 லட்சம் மதிப்பிலான பசுமை வீடுகள், பொது சுகாதாரத்துறையின் கீழ் 20 பயனாளிகளுக்கு 1 லட்சம் மதிப்பில் ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.

மேலும், தொடக்க வேளாண்மை மற்றும் கூட்டுறவு சங்கம் மூலம் 2 பயனாளிகளுக்கு 1 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு 19,484 மதிப்பில் சலவை பெட்டிகளையும் வழங்கினார்.

மகளிர் திட்டம் சார்பில் 134 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு 56.85 லட்சம் மதிப்பில் சமுதாய முதலீடு நிதி மற்றும் தனிநபர் வங்கி கடனுதவிகளும், பட்டு வளர்ச்சி துறையின் சார்பில் 11 பயனாளிகளுக்கு 3.7 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளும் என 465 பயனாளிகளுக்கு 1.51 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் இந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்டன.



இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக மாவட்ட ஆட்சியர் அங்கு பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை பார்வையிட்டார்.



இந்நிகழ்வில் கோட்டாட்சியர் பண்டரிநாதன், அன்னூர் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் சத்தியமூர்த்தி, காரே கவுண்டன் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் தங்கராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...