ஊட்டி தாவரவியல் பூங்காவில் துலிப் மலர்களை ஆர்வமுடன் கண்டு ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள்!

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் முதல் முறையாக வளர்க்கப்பட்டு, கண்ணாடி மாளிகையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள துலிப் மலர் உள்ளிட்ட, 50 வகையான வண்ண மலர்களைச் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.



நீலகிரி: உதகை தாவர பூங்காவில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ள துலிப் மலர்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.



நீலகிரி மாவட்டம் உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பிரசித்தி பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்காவைக் காண அதிக ஆர்வம் காட்டுவது வழக்கம்.



ஆனால் தற்போது குளிர்காலம் என்பதால் பூங்கா மலர்கள் இன்றி பொலிவிழந்து காணப்படுவதால், சுற்றுலாப் பயணிகள் பூங்காவை மட்டுமே சுற்றிப் பார்த்து ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.



இதனையடுத்து சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசிக்க பூங்காவிற்குள் உள்ள பழமையான கண்ணாடி மாளிகையில் சிறப்பு ஏற்பாடுகளைப் பூங்கா நிர்வாகம் செய்துள்ளது.



அதாவது கண்ணாடி மாளிகைக்குள் பனியின் தாக்கம் இருக்காது என்பதாலும், குளிரிலும் பூக்கள் பாதிக்காத வகையில், 50 வகையான மலர் செடிகள் கொண்ட 25 ஆயிரம் தொட்டிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.



அதில் வழக்கமான ரகங்களான பெட்டூனியா, காகித பூ, ஐட்ரிஜினியா, பால்சம், பிக்கோனியா, டெய்சி எனப் பல வண்ணங்களில் மலர் தொட்டிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.



அதில் ஜம்மு காஷ்மீர் போன்ற பனிப் பிரதேசங்களிலும் மட்டுமே பூக்க கூடிய துலிப் மலர்ச் செடிகள் தாவரவியல் பூங்கா பண்ணையில் முதல் முறையாக பயிரிட்டு வெற்றி கரமாக வளர்க்கப்பட்டு பூக்கள் பூத்துள்ளதையடுத்து 4 வித துலிப் மலர் தொட்டிகளும் இடம் பெற்றுள்ளன.



சிவப்பு, மஞ்சள், வெள்ளை, பிங்க் என பூத்துள்ள துலீப் மலர்களைச் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...