தாராபுரத்தில் காவல்துறை சார்பில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் - டிஎஸ்பி தன்ராஜ் பங்கேற்பு!

தாராபுரத்தில் காவல்துறை சார்பில் நடந்த மக்கள் குறை தீர்ப்பு முகாமில் மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரர்களிடம் வாங்கிய நிலத்திற்குப் பணம் தராமல் ஏமாற்றி வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு அளிக்கப்பட்டது.



திருப்பூர்: தாராபுரத்தில் காவல்துறை சார்பில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஜோதி திருமண மண்டபத்தில் டிஎஸ்பி தன்ராஜ் தலைமையில் நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் காவல்துறை சார்பில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஜோதி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த முகாமிற்கு தாராபுரம் டிஎஸ்பி தன்ராஜ் தலைமை வகித்தார்.



அதில் தாராபுரம், குண்டடம், மூலனூர், அலங்கியம் உள்ளிட்ட பல்வேறு பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்களது குறைகளைக் கோரிக்கை மனுக்களாக டிஎஸ்பி தன்ராஜிடம் அளித்தனர். அப்போது பேசிய அவர், மனுக்கள் மீது ஒரு வாரக் காலத்திற்குள் நடவடிக்கை எடுத்துத் தீர்வு காணப்படும் எனத் தெரிவித்தார்.



அப்போது மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரர்களான ராஜாராம்(65) மற்றும் சத்தியமூர்த்தி(60), இருவரும் புகார் மனு ஒன்று அளித்தனர். அந்த மனுவில், தாராபுரம் அருகே உள்ள பஞ்சப்பட்டி கிராமத்தில் முத்து வேளாண்காடு என்ற இரண்டு ஏக்கர் பூர்வீக நிலத்தை கடந்த 2020ஆம் ஆண்டுவிற்பனை செய்து தருவதாகக் கூறி பெரிய கடைவீதியில் உள்ள நில புரோக்கர் கோபி என்பவர், இருவரிடமும் கையெழுத்து பெற்றுள்ளார்.

அதன் பிறகு அவர், நிலத்தை பண்ணாரி அம்மன் சுகுமார் மற்றும் ஸ்டாலின் என்பவருக்கு விற்றுள்ளார். பண்ணாரி அம்மன் சுகுமார் மற்றும் ஸ்டாலின் இருவரும் ஆறு மாத காலத்துக்குள் இடத்தை பத்திரப் பதிவு செய்து பணத்தைத் தருவதாகத் தெரிவித்திருந்த நிலையில் 3 வருடங்கள் ஆகியும் நிலத்திற்கு உண்டான தொகையைக் கொடுக்காமல் ஏமாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்வதற்குக் கூட பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வரும் நிலையில், தம்பியான ரவிச்சந்திரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிலத்தை வாங்கியவர்களிடம் பணத்தைத் தனது அண்ணனிடம் கொடுக்குமாறு கேட்டுள்ளார்.

அதற்கு அவர்கள் பணம் கொடுக்க மறுத்தது மட்டுமில்லாமல், கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...