உடுமலை ஏழுகுளம் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலைகளை பாதுகாக்க விவசாயிகள் வலியுறுத்தல்

உடுமலையில் ஏழு குளம் பாசன திட்டத்திற்குட்பட்ட குளங்களில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டு உள்ளது.


திருப்பூர்: உடுமலை ஏழுகுளம் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி விவசாயிகள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை ஏழு குளம் பாசன திட்டத்திற்கு உட்பட்ட குளங்களுக்கு திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு நிரப்பப்படுகின்றன.



இந்த குளங்களை சிலர் ஆக்கிரமித்துள்ளதாகவும், அவற்றை அகற்ற வேண்டும் எனத் தமிழக அரசிற்கு விவசாயிகள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, ஏழு குளங்களை சுற்றி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதால், நீர்தேக்க பரப்பளவு படிப்படியாக குறைந்து கரைகளில் அரிப்பு ஏற்பட்டு வருகிறது.

பருவமழை குறைந்து விட்டதால், இந்த ஏழு குளங்களில் நிரப்பப்படும் தண்ணீரை அடிப்படையாகக் கொண்டு, கரும்பு, தென்னை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வரும் காலங்களில் ஆக்கிரமிப்பு தொடர்ந்தால், இந்தப் பகுதியில் விவசாயம் என்பது கேள்விக்குறியாகும். ஆகவே அனைத்து குளங்களிலும் பாரபட்சமில்லாமல் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...