அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி - உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் ஓ.பி.எஸ்.க்கு பின்னடைவு

அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்பட்டது செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களையும் தள்ளுபடி செய்துள்ளது.


சென்னை: சென்னையை அடுத்த வானகரத்தில் கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சி மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்குவதாக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தப் பொதுக்குழு முடிவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி பொதுக்குழு முடிவு செல்லாது என உத்தரவிட்டார். இதை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்தனர்.

எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக அமைந்த உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்துஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. அதில்,ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என்ற உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு உறுதிப்படுத்தியுள்ளது.

அதன்படி, எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும். மேலும், அவர் அதிமுக அதிகாரப்பூர்வ பொதுச்செயலாளராகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களையும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வத்தில் அரசியல் நகர்வுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...