உடுமலை திருமூர்த்தி மலை அமண லிங்கேஸ்வரர் கோவிலில் ஜப்பான் நாட்டினர் சிறப்பு வழிபாடு

உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலை அமண லிங்கேஸ்வரர் திருக்கோவிலில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் சிவனின் தீவிர பக்தரான பாலகும்ப குருமுனி தலைமையில் கரகம் எடுத்துச் சிறப்பு வழிபாடு நடத்தினர்.


திருப்பூர்: திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்திமலை அமண லிங்கேஸ்வரர் திருக்கோவிலுக்கு ஜப்பான் நாட்டு சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் சிவனின் தீவிர பக்தரான பாலகும்ப குருமுனி தலைமையில் இன்று வருகை தந்தனர்.



பின்னர் வனப்பகுதியில் உள்ள பஞ்சலிங்க அருவி அருகில் உள்ள பஞ்சலிங்கங்களுக்குச் சிறப்பு அபிஷேகம், யாகங்கள், பூஜை செய்த பின்னர், திருமூர்த்தி மலையில் உள்ள அமணலிங்கேஸ்வரரை தரிசனம் செய்தனர். பின்னர் சமூக சேவையாகக் கோவில் வளாகத்தில் கிடந்த பிளாஸ்டிக் பேப்பர்கள், துணிகளை அகற்றினர்.



பின்னர் செய்தியாளர்களிடம் சுப்ரமணியம் என்ற பக்தர் கூறுகையில், ஜப்பான் மற்றும் உலகம் முழுவதும்சிவனின் பெருமைகளைப் பரப்புவதை நோக்கமாக கொண்டு ஆன்மீக தேடல் பயணமாக இன்று பிரம்மா,விஷ்ணு,சிவன் ஆகியோர் ஒருங்கே அமைந்துள்ள திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் திருக்கோவிலுக்கு இன்று வருகை புரிந்து பஞ்சலிங்கங்களுக்குச் சிறப்பு அபிஷேகம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆன்மீக தேடல்பயணத்தின்முக்கிய நோக்கமேசிவனின் புகழ்பெருமைகளை ஐப்பான் மற்றும் உலகமக்களுக்குத் தெரிவிப்பது ஆகும். மேலும்தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு பகுதியில் உள்ள சிவன் தலங்கள் மற்றும் அறுவடை வீடுகள், நவகிரக கோவில்கள் உட்பட பல்வேறு கோவில்களுக்குச் சென்று உலகமக்கள் அமைதி மற்றும் சாமதானத்திற்கும் வழிபாடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

முன்னதாகதிருமூர்த்தி மலையில், தீர்த்தம் எடுக்க வந்தகிராம மக்களைக் கண்டதும், ஜப்பான் நாட்டுக் குழுவினர் தீர்த்த கரகம் எடுத்துச் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டது நெகிழ்ச்சி ஏற்படுத்தியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...