பிரியாணிக்கு பின் சாதம் கேட்டு தகராறு....ஓட்டல் ஊழியரை தாக்கும் வாடிக்கையாளர் சிசிடிவி காட்சி

கோவை மாவட்டம் சூலூர் அருகே பிரபல ஓட்டலில் பிரியாணிக்கு பின் வெள்ளை சாதம் கேட்டு வாடிக்கையாளரும் ஓட்டல் ஊழியர்களும் மோதிக்கொண்ட சிசிடிவி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை மாவட்டம் சூலூர் நரசிம்ம மில் பகுதியில் தனியார் மெஸ் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சைவம் அசைவம் உணவு வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் ஒண்டிப்புதூரைச் சேர்ந்த சிவில் இன்ஜினியர் ஒருவர், தனது இரண்டு நண்பர்களுடன் அந்த ஹோட்டலுக்கு சாப்பிட சென்றுள்ளார்.

ஒருவர் மட்டும் சைவ சாப்பாடு ஆர்டர் செய்த நிலையில் மற்ற இருவரும் ஒரு பிரியாணி வகையை வாங்கி பங்கிட்டு சாப்பிட்டுள்ளனர். பிரியாணி சாப்பிட்ட பின் அவர்கள் வெள்ளை சாதம் கொடுக்கும்படி ஓட்டல் ஊழியரிடம் கேட்டுள்ளனர்.



அதற்கு ஓட்டல் ஊழியர்கள் மறுப்பு தெரிவிக்கவே இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது கைகலப்பானது.



அதில் ஹோட்டல் உரிமையாளர் மற்றும் சிவில் இன்ஜினியர் உடன் வந்த மூன்று பேரும் ஆக்ரோஷமாக தாக்கிக் கொள்ளும் சிசிடிவி காட்சிகள் நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இரு தரப்பினரும் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், சிசிடிவி காட்சிகளை சோதனை செய்த போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து, தாங்கள் சமாதானமாக செல்வதாக கூறி இரு தரப்பினரும் புகாரை வாபஸ் பெற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...