அதிமுக தலைமை குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு - தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?

கடந்த ஜூலை 11ஆம் அதிமுக பொதுக்குழு நடைபெற்றது செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி, டிடிவி. தினகரன், ஜெயக்குமார் மற்றும் புகழேந்தி உள்ளிட்டோர் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.



சென்னை: அதிமுக பொதுக்குழு நடைபெற்றது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதுதொடர்பாக தலைவர்களின் தெரிவித்த கருத்து என்ன என்பதை வாருங்கள் பார்க்கலாம்...

எடப்பாடி பழனிசாமி, எதிர்கட்சி தலைவர்



மதுரையில் உள்ள அம்மா கோயிலுக்கு சென்று வழிபட்டேன், அப்போது, எம்.ஜி.ஆர், ஜெயலிலாதாவின் அருளால் நல்ல தீர்ப்பு வேண்டும் என்று அவர்களிடம் வேண்டினேன். இந்த தீர்ப்பு சக்தி மிக்க தலைவர்கள் தெய்வங்களாக மாறி கொடுத்த வரப்பிரசாதம். ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களை காக்கின்ற தீர்ப்பாக இன்றைய தீர்ப்பு வந்திருக்கிறது.

ஜெயக்குமார், முன்னாள் அதிமுக அமைச்சர்



அரசியலில் இனி ஓபிஎஸ்-இன் எதிர்காலம் ஜீரோதான். கௌரவர்கள் எவ்வளவு சூழ்ச்சி செய்தாலும் வரலாற்றில் அவர்கள் வெற்றி பெற முடியாது, பாண்டவர்களான எங்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது. ஓ.பி.எஸ், சசிகலா, டிடிவி தினகரன் சார்ந்தவர்களுக்கு அதிமுகவில் எப்போதும் இடமில்லை. அவர்கள் தவிர மற்றவர்கள் வந்தால் ஏற்றுக் கொள்வோம்.

டி.டி.வி தினகரன், அமமுகவின் பொது செயலாளர்







உச்ச நீதிமன்ற தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு தற்காலிக வெற்றி மட்டுமே, உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமியிடம் இரட்டை இலை கொடுக்கப்பட்டால் அதிமுக இன்னும் பலவீனமடையும்.

வைத்திலிங்கம், ஓபிஎஸ் ஆதரவாளர்



நீதிமன்ற தீர்ப்பால் எங்களுக்கு பாதிப்பு கிடையாது. பொதுக்குழு செல்லும் என்று மட்டுமே நீதிமன்றம் சொல்லி இருக்கிறது. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து வழக்கு தொடுப்போம்.

புகழேந்தி, ஓபிஎஸ் ஆதரவாளர்



சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளில் கட்சித் தலைமை யாருக்கு என்பது குறித்து ஏற்கனவே சிவில் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. அதை சிவில் நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளுங்கள் என குறிப்பிட்டு இருந்தது. அதனால் முழு தீர்ப்பையும் படித்த பின்பு கருத்து தெரிவிக்கிறேன்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...