உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலி - உடுமலையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று உடுமலையில் அதிமுகவினர், பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாக கொண்டாட்டம்.


திருப்பூர்: அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்கும் விதமாக உடுமலையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொது குழு கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுக்குழு கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது.

விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.



இதனை கொண்டாடும் வகையில் திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு ஆவின் சேர்மன் வழக்கறிஞர் மானோகரன் தலைமையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...