கோத்தகிரி அருகே நள்ளிரவில் உலா வரும் சிறுத்தை - குடியிருப்புவாசிகள் அச்சம்

கோத்தகிரியிலிருந்து அரவேனு கிராமத்திற்கு செல்லும் சாலையில் உள்ள பெரியார் நகர் பகுதியில் நேற்றிரவு சிறுத்தை ஒன்று உலா வந்துள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



நீலகிரி: கோத்தகிரி பகுதியில் நள்ளிரவில் உலா வந்த சிறுத்தையால் குடியிருப்புவாசிகள் அச்சமடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் சமீப காலமாக அதிகரித்து கொண்டே வருகிறது.



பகல் நேரங்களில் வனப் பகுதிக்குள் செல்லும் சிறுத்தைகள் இரவு நேரங்களில் பெரும்பாலும் குடியிருப்பு பகுதிகளிலே சுற்றித் தெரிந்து வருவதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் கோத்தகிரியிலிருந்து அரவேனு கிராமத்திற்கு செல்லும் சாலையில் உள்ள பெரியார் நகர் பகுதியில் நேற்றிரவு மீண்டும் ஒரு சிறுத்தை வந்துள்ளது.



இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதியில் சர்வ சாதாரணமாக நடந்து செல்லும், சிறுத்தை குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே அந்த சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்குமாறு வனத்துறையினருக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...