கோவை பி.என்.பாளையத்தில் மேம்பாலப் பணிகள் தாமதம் - அடிக்கடி நிகழும் விபத்துகள்!

பெரியநாயக்கன்பாளையத்தில் மேம்பாலம் கட்டும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதால், வாகனங்கள் முன் அறிவிப்பு இன்றி ஒருவழிப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது. இந்நிலையில் மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை நோக்கி வந்த பேருந்து எல்.எம்.டபிள்யூ பிரிவு அருகே சாலையோர சுவரில் மோதி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: பெரியநாயக்கன்பாளையத்தில்மேம்பாலம் கட்டும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதால், பேருந்துகள் அடிக்கடி விபத்தில் சிக்குவதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பெரியநாயக்கன் பாளையத்தில் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா முதல் சாமிசெட்டிபாளையம் பிரிவு வரை 1.4 கிலோ மீட்டர் நீளத்துக்கு, சுமார் ரூ.85 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டுமான பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில், எல்.எம்.டபிள்யூ பிரிவு பகுதியிலிருந்து சாமிசெட்டிபாளையம் வரை தூண்கள் அமைக்கும் பணி நிறைவடைந்து பல மாதங்களாகத் தூண்களுக்கு இடையே காங்கீரிட் ஓடுதளம் அமைக்கும் பணிகள் மெதுவாக நடந்து வருகின்றது.

இந்நிலையில் இந்த சாலை ஊட்டி, மைசூர் போன்ற பகுதிகளுக்குச் செல்ல முக்கியமானது என்பதால் வாகன போக்குவரத்து அதிகரித்துக் காணப்படும். இதனால் மேம்பாலப் பணிகளை விரைவாக மேற்கொள்ள வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.

ஆனால் மாற்றுவழி பாதையும் முன் ஏற்பாடுகள் செய்யப்படாமல் வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளதால் விபத்துகள் அதிகரித்துள்ளது. குறிப்பாக எல்.எம்.டபிள்.யூ பிரிவு வழியாக ஒரு வழிப்பாதையில் பேருந்துகள் அத்துமீறிச் செல்கின்றன.

இதனால் விபத்துகள் அதிகரிக்கிறது. இந்நிலையில் மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை நோக்கி எல்.எம்.டபிள்யூ., பிரிவு அருகே ஒரு வழிப்பாதையில் பேருந்து ஒன்று வந்தது.

இந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள கடைகளுக்கு அருகில் உள்ள சுவரில் மோதி நின்றது. அதிர்ஷ்டவசமாகக் கடைகளுக்குள் புகாமல் இருந்ததால் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. பேருந்தில் இருந்தவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, பெரியநாயக்கன் பாளையம் மேம்பாலப் பணிகள் தொடர்ந்து மந்தமாக நடைபெற்று வருகிறது. மாற்றுப்பாதைகளிலும் பல இடங்களில் சாலை முற்றிலும் சேதமடைந்துள்ளன. உடனடியாக சாலைகளைச் சீரமைத்துத் தர வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...