கோவை அருகே நடந்த சாலை விபத்துகளில் பெண் உட்பட 2 பேர் பலியான சோகம்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே இருசக்கர வாகனத்தின் மீது லோடு வேன் மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். சூலூரில் இருசக்கர வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் சூலூர் பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் பெண் உட்பட இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி அருகே உள்ள மரப்பேட்டையை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி மகேஸ்வரி (45). கணவன் - மனைவி இருவரும் இருசக்கர வாகனத்தில் உடுமலை - பொள்ளாச்சி சாலையில் சென்றுள்ளனர்.

அப்போது, அந்த வழியாக சென்ற லோடு வேன் ஒன்று இவர்களது இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பின்னால் அமர்ந்திருந்த மகேஸ்வரி தலையில் பலத்த காயம் அடைந்தார். இந்நிலையில் அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல், சூலூர் அடுத்த சித்தநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (35). கூலி தொழிலாளியான இவர், தனது இருசக்கர வாகனத்தில், பாப்பம்பட்டி - செட்டிப்பாளையம் சாலையில் சென்றுள்ளார்.

அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சுப்பிரமணியம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...