கோவையில் பழமையான விநாயகர் கோயில் சுவர் இடிப்பு - இந்து அமைப்பினர் கூடியதால் பரபரப்பு

கோவை பூ மார்க்கெட் அருகே சண்முகா திரையரங்கு முன்பு இருந்த விநாயகர் கோவில் சுவரை மாநகராட்சி ஊழியர்கள் இடித்த நிலையில், இதையறிந்த இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினர், அங்கு வந்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இடித்த சுவரை கட்டித்தர கோரிக்கை விடுத்தனர்.


கோவை: கோவை பூ மார்க்கெட் அருகே பழமையான விநாயகர் கோவில் சுவரை இடித்த மாநகராட்சி அதிகாரிகளுடன் இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கோவை பூ மார்க்கெட் அருகே சண்முகா திரையரங்கு முன்பு பழமை வாய்ந்த விநாயகர் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாநகராட்சி அதிகாரிகள் கோவிலின் சுற்று சுவரை இடித்ததாக கூறப்படுகிறது.



இதனை கேள்விப்பட்ட இந்து அமைப்பினர் மற்றும் பா.ஜ.க வினர் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



பின்னர் மாநகராட்சி அதிகாரிகள் இந்து அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களிடம் இடிக்கப்பட்ட கோவில் சுவரை கட்டித்தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து அந்த கோவில் அரச மரத்திற்கு மஞ்சள் பூசி குங்குமம் வைத்து, இந்து அமைப்பினர் வழிபாடு நடத்தினர். ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன் நெடுஞ்சாலைத்துறையினரால் அந்த கோவில் இடிக்கப்பட்ட போது, இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்கள் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...