கோவையில் நடந்து சென்ற மாணவியை தாக்கிய வாலிபர் மீது வழக்குப்பதிவு!

ராமநாதபுரம் பகுதியில் கல்லூரி விட்டு, நடந்து சென்ற மாணவியைத் தகாத வார்த்தைகளில் பேசி தாக்கிய வாலிபரை, மாணவி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: ராமநாதபுரம் பகுதியில் நடந்து சென்ற கல்லூரி மாணவியை வாலிபர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள கள்ளிமடையை சேர்ந்தவர் 23 வயது கல்லூரி மாணவி. இவர் நவ இந்தியா பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். மாணவி பள்ளியில் படிக்கும் போது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி, 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் வாலிபரின் நடவடிக்கைகள் மாணவிக்குப் பிடிக்காமல் போனதால், அவர் வாலிபரைக் காதலிப்பதை நிறுத்தியுள்ளார். மேலும் அவருடன் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்துள்ளார்.

இது வாலிபருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. சம்பவத்தன்று மாணவி கல்லூரிக்குச் சென்று விட்டு ராமநாதபுரத்தில் உள்ள பெட்ரோல் பங்க் வழியாக வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு வாலிபர் தனது நண்பருடன் மாணவியை பின் தொடர்ந்து சென்று அவரிடம் பேச முயன்றுள்ளார்.

ஆனால் மாணவி பேசாமல் நடந்து சென்றதால், ஆத்திரமடைந்த வாலிபர் தகாத வார்த்தைகளில் பேசி மாணவியைத் தாக்கியுள்ளார். பின்னர் கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கு இருந்து சென்றுள்ளார். இது குறித்து மாணவி ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் கல்லூரி மாணவியை தாக்கிய வாலிபர் மற்றும் அவரது நண்பர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...