ஊட்டி பந்தலூர் அருகே செந்நாய் கடித்து எருமைக் கன்று உயிரிழப்பு

பந்தலுார் அருகே வனப்பகுதியிலிருந்து வரும் செந்நாய்கள் கால்நடைகளை வேட்டையாடி வருவதால், அவைகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ளும்படி கிராம மக்களை வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். நேற்றிரவு கிராமத்திற்குள் புகுந்த செந்நாய், எருமைக் கன்றை வேட்டையாடி கொன்றது.


நீலகிரி: பந்தலுார் அருகே கிராமத்திற்குள் புகுந்து செந்நாய் எருமைக் கன்று வேட்டையாடியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் பந்தலுார் அருகே சேலக்குன்னா கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவர் வீட்டில் மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று வீட்டில் வளர்த்த எருமைக் கன்று ஒன்று மாயமாகி இருந்தது. அக்கம்பக்கத்தில் தேடிப் பார்த்தபோது அருகே இருந்த புல்வெளியில் கன்றுக்குட்டி இறந்து கிடந்தது.

இதுகுறித்து வனத்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்த பிதர்காடு வனச்சரகர் ரவி, வனவர் பெலிக்ஸ், வேட்டை தடுப்பு காவலர் கலைக்கோவில், வி.ஏ.ஓ.கர்ணன் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.

அதில் செந்நாய்கள் எருமையை வேட்டையாடியது தெரியவந்தது. கால்நடை மருத்துவர் ராஜராஜன் பிரேதப் பரிசோதனை செய்தார். வனத்துறையினர் கூறுகையில்,' இந்த பகுதியில் கால்நடைகளை விலங்குகள் வேட்டையாடி வரும் நிலையில், கால்நடை வளர்ப்போர் அவற்றைப் பாதுகாக்க வேண்டும். மக்களும் இரவில் இப்பகுதிகளில் நடமாட கூடாது என அறிவுறுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...