கோயம்புத்தூர் மாநகராட்சியில் வரும் பிப்.25, 26 தேதிகளில் சிறப்பு வரிவசூல் முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு நடப்பு நிதியாண்டின்‌ இரண்டாம்‌ அரையாண்டிற்கான செலுத்த வேண்டிய சொத்துவரி, காலியிடவரி, தொழில்வரி மற்றும்‌ குடிநீர் கட்டணம்‌ முதலிய அனைத்து நிலுவைகளையும்‌ செலுத்த பொதுமக்களின்‌ நலன் கருதி வருகின்ற 25 மற்றும் 26ஆம் தேதிகளில் சிறப்பு வரிவசூல் முகாம் நடைபெறுகிறது.


கோவை: கோவை மாநகராட்சி சார்பில் இரண்டு நாட்கள் சிறப்பு வரிவசூல் முகாம் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாநகராட்சியில்‌ நடப்பு 2022-231 நிதியாண்டின் இரண்டாம்‌ அரையாண்டிற்கான செலுத்த வேண்டிய சொத்துவரி, காலியிடவரி, தொழில்வரி மற்றும்‌ குடிநீர் கட்டணம்‌ முதலிய அனைத்து நிலுவைகளையும்‌ செலுத்த பொதுமக்களின்‌ நலன் கருதி மாநகராட்சியின்‌ கீழ்க்கண்ட வார்டு பகுதிகளில்‌ 25.02.2023ம்‌ மற்றும்‌ 26.02.2023ம்‌ தேதிகளில்‌ சிறப்பு வரிவசூல்‌ முகாம்கள்‌ நடத்தப்பட உள்ளன.

இதில்‌ கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்‌.5இல்‌ வளியாம்பாளையம்‌ பகுதி, வார்டு எண்‌.6இல்‌ வீரியம்பாளையம்‌ பகுதி, வார்டு எண்‌.7 மற்றும்‌ 8இல்‌ காளப்பட்டி நேரு நகா்‌ பள்ளியிலும்‌, வார்டு எண்‌.56இல்‌ சூர்யா நகர் - ரயில்வே கேட்‌ பகுதியிலும்‌, வார்டு எண்‌. 5இல்‌ ஒண்டிபுதூர் நெசவாளர்‌ காலனி பகுதியிலும்‌ நடைபெற உள்ளது.

மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்‌.17இல்‌ தேவி கார்டன்‌ -டிவிஎஸ்‌ நகர் ரோடு, கவுண்டம்பாளையம்‌, வார்டு எண்‌.35இல்‌ தேவாங்க நகர்-கற்பக விநாயகர் கோவில்‌ எதிர்புற புதிய மாநகராட்சி கட்டிடப்பகுதியிலும்‌, 26.02.2023 அன்று வார்டு எண்‌.36இல்‌ நியூ தில்லை நகா்‌ 5ஆவது கிராஸ்‌ - குடியிருப்போர் நல சங்கம்‌ வளாகத்திலும்‌, வார்டு எண்‌.75இல்‌ 25.02.2023 அன்று சீரநாயக்கன்பாளையம்‌- நேதாஜி வீதி-மாரியம்மன்‌ கோவில்‌ வளாகத்திலும்‌, 26.02.2023 அன்று அருந்ததியர்‌ காலனியிலும்‌, தெற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்‌.100இல், கணேசபுரம்‌ - அரசு நடுநிலைப்பள்ளி, வார்டு எண்‌.88இல்‌ குனியமுத்தூர்-தாமராஜா திரெளபதி அம்மன்‌ கோவில்‌ வளாகத்திலும்‌, வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.15 சுப்ரமணியம்பாளையம்‌- வார்டு அலுவலகம்‌ அருகிலும்‌, வார்டு எண்‌.18 புது தோட்டம்‌ பழைய ரேசன்கடை அருகிலும்‌, வார்டு எண்‌ 19இல்‌ மணியகாரம்பாளையம்‌- அம்மா உணவகம்‌, வார்டு எண்‌.21ல்‌ ஜனதா நகர்- எம்‌.ஜி.ஆர்‌ நகா்‌ பகுதியிலும்‌, வார்டு எண்‌.25இல்‌ காந்தி மாநகா்‌ - அரசு மேல்‌ நிலைப்பள்ளியிலும்‌ மற்றும்‌ வார்டு எண்‌ 28இல்‌ காமதேனு நகர் - வார்டு அலுவலகத்திலும்‌ நடைபெற உள்ளது.

மத்திய மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்‌.32இல்‌ சிறுவா பூங்கா, சங்கனூர்‌ நாராயணசாமி வீதியிலும்‌, வார்டு எண்‌ 62. சாரமேடு மாநகராட்சி ஆரம்ப பள்ளியிலும்‌, வார்டு எண்‌.63இல்‌ ஒலம்பஸ்‌- 80 அடி ரோட்டில்‌ உள்ள மாநகராட்சி வணிக வளாகத்திலும்‌, வார்டு எண்‌ 80இல்‌ கெம்பட்டி காலனி - மாநகராட்சி ஆரம்ப பள்ளியிலும்‌ மற்றும்‌ வார்டு எண்‌ 84இல்‌ ஜி.எம்‌. நகரில்‌ உள்ள தாகத்‌ இஸ்லாம்‌ பள்ளியிலும்‌ நடைபெற உள்ளது.

மேலும்‌, 31.03.2023 வரை சனி மற்றும்‌ ஞாயிற்றுக்கிழமைகளில்‌ அரசு விடுமுறை நாட்கள்‌ நீங்கலாக ஏனைய நாட்களில்‌ அனைத்து வரிவசூல்‌ மையங்களும்‌ வழக்கம்போல்‌ காலை 9மணி முதல்‌ மாலை 4 மணி வரை செயல்படும்‌. எனவே, பொதுமக்கள்‌ இவ்வசதியினை பயன்படுத்தி மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய வரியினங்களை செலுத்துமாறு மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...